டி20 உலககோப்பை தொடரில் விராட் கோலியின் மாபெரும் சாதனையை முறியடித்த – சஞ்சு சாம்சன்

Samson and Kohli
- Advertisement -

இந்தியா டி20 கிரிக்கெட் அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இருதரப்பு டி20 தொடரின் போது மோசமான பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்தியதன் காரணமாக நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதன்மை துவக்க வீரருக்கான வாய்ப்பை இழந்தார். இதன் காரணமாக அவருக்கு பதிலாக அபிஷேக் சர்மாவுடன் இஷான் கிஷன் லீக் சுற்று போட்டிகளின் போது துவக்க வீரராக விளையாடி வந்தார்.

விராட் கோலியின் சாதனையை முறியடித்த சஞ்சு சாம்சன் :

ஆனால் முக்கியமான சூப்பர் 8 சுற்றின் போது மீண்டும் துவக்க வீரராக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்க அதனை கெட்டியாக பயன்படுத்திக் கொண்ட சஞ்சு சாம்சன் தான் விளையாடிய 5 போட்டிகளில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக சூப்பர் 8 சுற்றின் போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும், அரையிறுதி போட்டியின் போது இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் 46 பந்துகளில் 89 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவியதோடு சேர்த்து தொடர் நாயகன் விருதினையும் வென்றிருந்தார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் 89 ரன்கள் அடித்ததன் மூலம் முன்னாள் இந்திய அனுபவ வீரரான விராட் கோலியின் மாபெரும் சாதனை ஒன்றினை டி20 உலக கோப்பை தொடரில் முறியடித்து அசத்தியுள்ளார்.

அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஒரு டி20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக விராட் கோலி முதலிடத்தில் இருந்தார். கடந்து 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் விராட் கோலி 319 ரன்கள் அடித்ததே ஒரு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி வீரர் அடித்த அதிக ரன்களாக இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உ.கோ போட்டிகளில் மலிங்காவின் மாபெரும் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்த – ஜஸ்ப்ரீத் பும்ரா

ஆனால் அந்த சாதனையை தற்போது முறியடித்துள்ள சஞ்சு சாம்சன் இந்த 2026 டி20 உலக கோப்பை தொடரில் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தாலும் 321 ரன்களை குவித்து ஒரு டி20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக விராட் கோலியை தாண்டி சஞ்சு சாம்சன் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement