அபிஷேக் சர்மா கிட்ட இதை மட்டும் சொல்லுங்க.. அவர் கண்டிப்பா அசத்துவாரு – ரவி சாஸ்திரி நம்பிக்கை

Ravi Shastri
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது தற்போது நடைபெற்று வரும் நடப்பு 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணியே கோப்பையை வெல்லும் என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த அளவிற்கு இந்திய அணி இந்த தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

அபிஷேக் சர்மாவுக்கு அறிவுரை கூறிய : ரவி சாஸ்திரி

இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுவது துவக்க வீரரான அபிஷேக் சர்மாவின் மோசமான பேட்டிங் ஃபார்ம் தான். ஏனெனில் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக இருக்கும் அவர் இந்த உலக கோப்பை தொடரில் அசத்துவார் என்று பார்க்கப்பட்ட வேளையில் இதுவரை தான் விளையாடி 7 போட்டிகளில் 89 ரன்கள் மட்டுமே அவர் அடித்துள்ளார்.

- Advertisement -

இதன் காரணமாக அபிஷேக் சர்மாவின் பேட்டிங் பார்ம் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன. இந்நிலையில் அபிஷேக் சர்மாவிற்கு அறிவுரை வழங்கும் விதமாக முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : என்னை பொறுத்தவரை இந்திய அணியில் எந்த ஒரு மாற்றத்தையும் தற்போது செய்ய தேவை இல்லை.

ஏனெனில் தொடர்ச்சியாக இந்திய அணி வெற்றி பெற்று வரும் வேளையில் அணியை மாற்றக்கூடாது. ஒவ்வொரு வீரரிடமும் அவர்களது நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் உங்களது அறிவுரைகள் இருக்க வேண்டும். அந்த வகையில் அபிஷேக் சர்மாவை அமர வைத்து அவரது பேட்டிங் குறித்த நம்பிக்கையான வார்த்தைகளை கூற வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : கோப்பையை ஜெயித்தால் இரட்டை சாதனை தான்.. இந்தியாவிற்கு காத்திருக்கும் – பொன்னான வாய்ப்பு

அவரது திறமையை வலுப்படுத்தும் அளவிற்கு நாம் அவருக்கு ஆறுதல் கூறினாலே அவர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் பார்முக்கு திரும்புவார். இந்த தொடரை பொருத்தவரை அபிஷேக் ஷர்மா சற்று ஃபார்ம் இழந்து காணப்பட்டாலும் அவருக்கு அணி நிர்வாகம் கொடுக்கும் நம்பிக்கையும், ஆதரவும் அவரை சிறப்பாக செயல்பட வைக்கும் என ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement