இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியானது மார்க் 8-ஆம் தேதியான நாளை அகமதாபாத் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என இவ்விரு அணிகளும் தற்போது அங்கு தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய அணி நிகழ்த்தப்போகும் இரட்டை சாதனை :
மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வந்த இந்த தொடரில் இறுதிப் போட்டிக்கு இவ்விரு அணிகளும் முன்னேறியுள்ள வேளையில் இந்த போட்டியில் வெற்றி பெறப்போவது யார்? என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் இந்திய அணியானது கோப்பையை கைப்பற்றும் பட்சத்தில் இரட்டை சாதனையை நிகழ்த்தும் வாய்ப்புக்காக காத்திருக்கிறது.
அந்த வகையில் இந்திய அணி நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இதுவரை இந்த டி20 உலகக்கோப்பை தொடரை நடத்திய எந்த ஒரு அணியும் சொந்த மண்ணில் கோப்பையை வெற்றி பெற்றது கிடையாது. ஒருவேளை இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றும் பட்சத்தில் தொடரை நடத்திய அணியே கோப்பையை வென்ற பெருமை வரும்.
அதுமட்டும் இன்றி ஏற்கனவே இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் அதிகபட்சமாக தலா இரண்டு முறை டி20 உலக கோப்பையை கைப்பற்றியுள்ள வேளையில் இம்முறை இந்திய அணி வெற்றி பெற்றால் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணியாக மாறும். இப்படி இரண்டு சாதனைகளை நிகழ்த்த இந்திய அணி காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : டி20 உலககோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் இவர்தான் – மைக்கல் கிளார்க் கணிப்பு
ஏற்கனவே இந்த 2026 டி20 உலககோப்பை தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் 4 வெற்றிகளை பெற்ற இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக மட்டுமே தோல்வியை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



