நடைபெற்று வரும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டியானது மார்ச் 8-ஆம் தேதியான நாளை அகமதாபாத் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த இறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கும் வேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்து எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
அபிஷேக் சர்மாவுக்கு ஆதரவளித்த சஞ்சு சாம்சன் :
ஒருபுறம் பலம் வாய்ந்த அணியாகவும், நடப்பு சாம்பியனாகவும் இந்திய அணி இந்த இறுதிப் போட்டியில் களமிறங்க இருக்கிறது. அதே வேளையில் இந்த தொடரில் தங்களது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மிகச்சிறப்பான வெற்றிகளை குவித்து வரும் நியூசிலாந்து அணியும் இந்திய அணியை எதிர் கொள்ள காத்திருக்கிறது.
எனவே சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி ரசிகர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா 7 போட்டிகளில் விளையாடி 89 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். அதில் ஒரே ஒரு அரைசதம் மட்டும் தான் அவர் அடித்துள்ளார். இதன் காரணமாக அவரது பேட்டிங் எவ்வாறு இருக்கும்? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் அபிஷேக் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் குறித்து பேசியிருந்த சஞ்சு சாம்சன் கூறுகையில் : ஞாயிற்றுக்கிழமை குஜராத் மாநிலம் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கும் இறுதிப்போட்டி அபிஷேக் சர்மாவுக்கு சிறந்த நாளாக இருக்கும் என்று தனது ஆதரவையும் நம்பிக்கையும் தெரிவித்துள்ளார். மேலும் தான் முதல் முறையாக டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் விளையாட இருப்பது என் வாழ்நாளிலேயே மிகச் சிறந்த தருணங்களில் ஒன்று என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : எட்ட முடியாத இலக்கு என்பது எதுவுமில்லை.. சி.எஸ்.கே ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்த – ருதுராஜ் கெய்க்வாட்
ஏற்கனவே நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியிலும் சரி அதற்கு அடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதி போட்டியிலும் சரி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள சஞ்சு சாம்சன் இறுதி போட்டியிலும் அசத்துவார் என்பதே பலரது நம்பிக்கையாகவும் உள்ளது.



