இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியானது மார்ச் 1-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதனால் வாழ்வா? சாவா? என்கிற நிலையில் நடைபெற்ற இந்த போட்டி மிகச் சிறப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று முடிந்தது.
இந்திய அணி தோத்திருந்தா அவர்மீது தான் பழி போடுவாங்க : டூபிளெஸ்ஸிஸ்
இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்தது. அந்த வகையில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை குவித்தது.
பின்னர் 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை மிகச் சிறப்பாக துரத்திய இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களை மிகச் சிறப்பாக எதிர் கொண்டு 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்த்து மும்பை வான்கடே மைதானத்தில் விளையாட இருக்கிறது.
இந்நிலையில் ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து இருந்தால் அபிஷேக் சர்மாவை அனைவரும் கைகாட்டி இருப்பார்கள் என்று தனது கருத்தினை தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் பாப் டூபிளெஸ்ஸிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணி வெற்றி பெற்று வருவது ஒரு நல்ல விஷயமாகும். ஏனெனில் இந்திய அணி வெற்றி பெற்று வருவதாலே அபிஷேக் சர்மா மீது விமர்சனம் இல்லாமல் இருந்து வருகிறது.
இதையும் படிங்க : அரையிறுதி போட்டியில் அபிஷேக் சர்மாவுக்கு இந்த நெருக்கடி இருக்கும் – அணில் கும்ப்ளே எச்சரிக்கை
ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து இருந்தால் ஃபார்மில் இல்லாத வீரர்கள் மீது அதிகளவு விமர்சனம் ஏற்பட்டிருக்கும். அந்த வகையில் அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்திருக்கும் பட்சத்தில் அனைவரது விரல்களும் அபிஷேக் சர்மாவை நோக்கியே நீண்டிருக்கும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.



