சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது நடைபெற்று வரும் நடப்பு 2026 டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணி எந்த ஒரு போட்டியிலும் தோற்காமல் நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை ஏ பிரிவில் முதல் அணியாக உறுதி செய்தது.
அக்சர் படேல் குறித்து பேசிய : ரவிச்சந்திரன் அஷ்வின்
இதன் காரணமாக சூப்பர் 9 சுற்று ஆட்டத்திலும் இந்திய அணி பலமாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி அடுத்ததாக நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சூப்பர் 8 சுற்று முதல் ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் பெரியளவில் ஏமாற்றத்தை அளித்ததால் இன்றைய போட்டியில் நிறைய மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது போட்டிக்கு முன்னதாக இந்திய அணி குறித்து சில கருத்துக்களை முன்னாள் இந்திய வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
தற்போது அபிஷேக் ஷர்மா இந்திய அணியில் தொடர வேண்டுமா? இல்லையா? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது. ஆனால் இப்போது அந்த மாற்றங்களை செய்தால் அணியின் நிலைமை எந்த அளவிற்கு நன்றாக இருக்கும் என்று எனக்கு தெரியாது. அணியில் விளையாடும் அனைத்து வீரர்களுமே திறமையான வீரர்கள். அவர்களுக்குள் சந்தேகம் இருந்தால் தங்களுடைய சிறப்பான செயல்பாட்டை அவர்களால் வெளிப்படுத்த முடியாது.
இதையும் படிங்க : யார் என்ன சொன்னாலும் பரவாயில்ல.. நீ இதை மட்டும் பண்ணு போதும்.. அபிஷேக் சர்மாவுக்கு – டூபிளெஸ்ஸிஸ் ஆதரவு
எனவே அனைவரும் நம்பிக்கையுடன் விளையாட வேண்டியது அவசியம். அதேவேளையில் இந்திய அணியின் துணை கேப்டனான அக்சர் படேலை கடந்த போட்டியின் போது விட்டு விட்டோம். அவர் தற்போது என்ன மனநிலையில் இருக்கிறார்? அவரது மனதில் என்ன நடக்கிறது? என்பது எனக்கு தெரியவில்லை. அக்சர் பட்டேல் நிச்சயம் வருத்தம் அடைந்திருப்பார் என அஸ்வின் பேசியது குறிப்பிடத்தக்கது.



