தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற 2026 டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக எதிர்வரும் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ரிங்கு சிங்கை இங்கு விளையாட வையுங்க : ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து
நேற்று தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டம் காரணமாகவே இந்திய அணி தோல்வியை சந்தித்ததால் இந்த ஒரு தோல்விக்கு பின்னர் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குளறுபடியாக இருக்கிறது என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் ரிங்கு சிங்கை இந்திய அணி தவறாக பயன்படுத்தி வருகிறது என்று தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அந்தவகையில் அவர் கூறியதாவது : நேற்றைய போட்டியை பொறுத்தவரை ரிங்கு சிங் வாஷிங்டன் சுந்தர் இறங்கிய இடத்தில் களமிறங்கி இருக்கவேண்டும். ஏனெனில் வாஷிங்டன் சுந்தர் நல்ல பேட்ஸ்மேன் தான் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் ரிங்கு சிங் போன்ற ஒரு முழுநேர பேட்ஸ்மேனை 8 ஆவது இடத்தில் களமிறங்கி என்ன பயன்? அவர் இறங்கும்போது கிட்டத்தட்ட போட்டி முடிந்து விட்டது.
இதையும் படிங்க : ஈஸியா தோத்தது மட்டுமின்றி மோசமான சாதனைக்கும் ஆளான இந்திய அணி – விவரம் இதோ
ஆகவே முன்கூட்டிய 5 ஆவது இடத்தில் ரிங்கு சிங் விளையாட வேண்டும். அப்படி விளையாடினால் தான் அவரால் இன்னிங்க்ஸை கட்டமைத்து இறுதியில் இலக்கினை நோக்கி செல்ல முடியும். அவருக்கு பின்னால் ஹார்டிக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் இருப்பதால் அவருக்கும் நம்பிக்கையுடன் பேட்டிங் செய்ய இந்த முடிவு உதவும் என ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.



