இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 30-ஆவது லீக் போட்டியானது நேற்று பல்லகலே நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி அசத்தியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
இலங்கை அணியின் வெற்றியால் இந்திய அணிக்கு அடித்த அதிர்ஷ்டம் :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 56 ரன்களையும், மிட்சல் மார்ஷ் 54 ரன்களையும் குவித்து அசத்திருந்தனர். பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது :
ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 18 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 184 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இலங்கை அணி சார்பாக பதும் நிசாங்கா 100 ரன்களையும், குசால் மென்டிஸ் 51 ரன்களையும் குவித்து அசத்தினர். இதன் மூலம் இலங்கை அணி சூப்பர் 8 சுற்றுக்கு பி பிரிவில் முதல் அணியாக தகுதி பெற்றது.
இந்நிலையில் நேற்று இலங்கை அணி பெற்ற வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட தகர்ந்துள்ள வேளையில் இந்திய அணிக்கு ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது. அந்த வகையில் இந்திய அணிக்கு கிடைத்த கூடுதல் சாதகம் யாதெனில் : குரூப் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் குரூப் பி பிரிவில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணியுடன் தான் மோத வேண்டும்.
இதையும் படிங்க : ஆஷிஷ் நெஹ்ராவுடன் இணைந்து மோசமான சாதனையை சமன் செய்த அபிஷேக் சர்மா – விவரம் இதோ
அந்த வகையில் குரூப் பி பிரிவில் இலங்கை அணி தற்போது முதல் இடத்தில் இருக்கும் வேளையில் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா தோற்றதால் அந்த பிரிவின் இரண்டாவது இடத்திற்கு ஜிம்பாப்வே தகுதி வர அதிக வாய்ப்பு இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



