ஆஷிஷ் நெஹ்ராவுடன் இணைந்து மோசமான சாதனையை சமன் செய்த அபிஷேக் சர்மா – விவரம் இதோ

Abhishek and Nehra
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி-யின் 10ஆவது டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்ற இந்திய அணி தாங்கள் விளையாடிய முதல் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று குரூப் ஏ பிரிவில் முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது.

மோசமான சாதனையை நிகழ்த்திய அபிஷேக் சர்மா :

இருந்தாலும் இந்த டி20 உலககோப்பை தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மாவின் ஆட்டம் ஏமாற்றம் தரும் விதமாக இருந்து வருகிறது. ஏனெனில் இந்த தொடரின் முதல் லீக் சுற்று ஆட்டத்தில் அமெரிக்க அணியை எதிர்த்து விளையாடுகையில் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகியிருந்தார்.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து நமீபியா அணிக்கு எதிரான போட்டியை உடல் நலக்குறைவு காரணமாக தவறவிட்ட அவர் மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது முழு உடற்தகுதியை ஈட்டி அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால் பாகிஸ்தான் அணிக்கெதிரான இந்த போட்டியிலும் 4 பந்துகளை மட்டுமே சந்தித்து மீண்டும் ஒருமுறை டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்திருந்தார்.

அந்தவகையில் நேற்று கொழும்பு நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டக் அவுட்டாகிய அவர் அதன்மூலம் சர்வதேச டி20 உலககோப்பை தொடரில் ஒரு மோசமான சாதனைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். அந்தவகையில் அவர் நிகழ்த்திய மோசமான சாதனை யாதெனில் : இந்த 2026 டி20 உலககோப்பை தொடர்தான் அவருக்கு முதல் டி20 உலககோப்பை தொடராக அமைந்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : அபிஷேக் சர்மா டி20 உலககோப்பையில் சறுக்க என்ன காரணம்? என்பது குறித்து – ரவி சாஸ்திரி கருத்து

அப்படி தான் அறிமுகமான முதல் டி20 உலககோப்பை தொடரின் முதல் 2 ஆட்டங்களிலும் டக் அவுட்டாகி முன்னாள் இந்திய வீரரான ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் பங்களாதேஷ் வீரர் இம்ருள் கையிஸ் ஆகியோருடன் இணைந்து மோசமான சாதனையை சமன் செய்துள்ளார். நெஹ்ரா மற்றும் கையிஸ் ஆகியோரும் தாங்கள் அறிமுகமான முதல் டி20 உலககோப்பை தொடரின் முதல் 2 ஆட்டங்களில் டக் அவுட்டாகியிருந்து குறிப்பிடத்தக்கது.

Advertisement