நமீபியா மேட்ச் மட்டுமல்ல.. பாகிஸ்தான் போட்டியையும் தவறவிடப்போகும் அபிஷேக் சர்மா – என்ன நடந்தது?

Abhishek Sharma
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர இளம் துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா கடந்த ஓராண்டாகவே டி20 கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறப்பான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முக்கிய வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமெரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது லீக் போட்டியில் விளையாடிய அபிஷேக் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேறினார்.

பாகிஸ்தான் போட்டியை தவறவிடும் அபிஷேக் சர்மா :

அதன் பின்னர் தற்போது நடைபெற்று வரும் நமீபியா அணிக்கு எதிரான போட்டியை அவர் உடல்நல குறைவு காரணமாக தவற விட்டுள்ளார். அதாவது இந்த நமீபியா அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக வயிற்று உபாதையை சந்தித்த அபிஷேக் ஷர்மாவிற்கு கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஆகியவை இருந்தது. அதன் காரணமாக பயிற்சியில் ஈடுபடாத அவர் பிப்ரவரி 12-ஆம் தேதியான இன்று நடைபெற்று வரும் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை.

- Advertisement -

இந்நிலையில் இந்த நமீபியா அணிக்கு எதிரான போட்டி மட்டுமின்றி அடுத்ததாக பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெற இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் விளையாடுவது சந்தேகம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன் காரணமாக அடுத்த போட்டியிலும் சஞ்சு சாம்சனே துவக்க வீரராக களம் இறங்குவார் என்றும் தெரிகிறது. இப்படி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை அபிஷேக் சர்மா தவற விடுவார் என்பதை சூரியகுமார் யாதவ் மறைமுகமாக சுட்டிக்காட்டி உள்ளார்.

அதாவது நமீபியா அணிக்கு எதிரான போட்டிக்கான டாஸ் போடப்பட்ட பின்னர் இந்திய அணியின் மாற்றம் குறித்து பேசிய சூரியகுமார் யாதவ் அபிஷேக் சர்மா குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்து இருந்தார். அதில் அவர் குறிப்பிடுகையில் : அபிஷேக் ஷர்மா உடல்நிலை குறைவு காரணமாக இந்த போட்டியை தவற விடுகிறார் என்று கூறியதோடு மட்டுமின்றி ஒன்று அல்லது இரண்டு போட்டிகளை அவர் தவற விடுவார் என்று மேற்கோள் காட்டியிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : அபிஷேக் இல்லனா என்ன? அதான் இவர் இருக்காரே.. டாசுக்கு பிறகு 2 மாற்றங்களை அறிவித்த – சூரியகுமார் யாதவ்

இதன்மூலம் அடுத்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் பங்கேற்பது சந்தேகம் என்று தெரிகிறது. அதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் சஞ்சு சாம்சனுக்கு துவக்க வீரராக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்பது உறுதி.

Advertisement