நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியனான சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று பலமான நிலையில் உள்ளது. அதற்கடுத்து இன்று தங்களது இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது.
2 மாற்றங்களை அறிவித்த சூரியகுமார் யாதவ் :
அந்த வகையில் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் சற்று முன்னர் துவங்கிய இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நமீபியா அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நமீபியா அணியின் கேப்டன் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான டாசுக்கு பிறகு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் உள்ள மாற்றங்கள் குறித்து சூரியகுமார் யாதவும் சில கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த போட்டியில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பினோம். எனவே டாசில் தோற்று இருந்தாலும் முதலில் பேட்டிங் செய்வது மகிழ்ச்சி. டாசில் தோற்பது என்பது முக்கியமல்ல. ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் அதுதான் முக்கியம்.
இந்த தொடரில் டியூ பேக்டர் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். ஆனாலும் முதலில் பேட்டிங் செய்யும் போது மிகப்பெரிய ரன் குவிப்பை நாங்கள் வழங்கும் பட்சத்தில் எதிரணியை தடுத்து நிறுத்த முடியும். உண்மையிலேயே இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து ரன்கள் வந்தால் அது எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை அளிக்கும். இந்த போட்டியில் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : அந்த கோப்பையை ஜெயிக்காம நான் கிரிக்கெட்டை விட்டு போகமாட்டேன் – ரோஹித் சர்மா உருக்கம்
அபிஷேக்சர்மா இன்னும் உடல்நலம் தேறவில்லை என்பதனால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் வருகிறார் அபிஷேக் சர்மாவை போன்று சஞ்சு சாம்சனும் அதிரடியில் அசத்தக்கூடியவர். அதேபோன்று பும்ரா அணிக்குள் வருவதால் முகமது சிராஜ் வெளியேறுகிறார் என்று கேப்டன் அறிவித்தார். இந்த இரண்டு மாற்றங்களை தவிர்த்து வேறு எந்த மாற்றமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



