இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்கும் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது பலம் வாய்ந்த அணியாக இருப்பதால் நிச்சயம் இம்முறையும் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
சூரியகுமார் யாதவுக்கு வாக்குறுதியளித்த சுனில் கவாஸ்கர் :
அதேவேளையில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வேளையில் இந்த தொடர் குறித்து பல்வேறு முன்னாள் இந்திய வீரர்களும் தங்களது கணிப்புகளையும், அறிவுரைகளையும், விருப்பங்களையும் வெளிப்படையாக சமூக வலைதளத்தின் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் எதிர்வரும் இந்த டி20 உலக கோப்பை தொடரை இந்திய அணி வென்றால் மைதானத்திலேயே நடனம் ஆடுகிறேன் என இந்திய அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவுக்கு சத்தியம் ஒன்றினை செய்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
இந்திய அணி இம்முறை டி20 உலக கோப்பை தொடரில் விளையாட இருப்பதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். சூரியகுமார் யாதவ் மட்டும் டி20 உலக கோப்பையை கையில் வாங்கினால் அந்த நிமிடமே நான் மைதானத்தில் டான்ஸ் ஆட தொடங்குவேன். இந்த வயதில் என்னால் அதிகளவு டேன்ஸ் செய்ய முடியவில்லை என்றாலும் மைதானத்தில் நிச்சயம் என்னுடைய நடனம் இருக்கும்.
இதையும் படிங்க : இவ்ளோ சீக்கிரம் நான் திரும்பி வந்ததுக்கு அவங்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லனும் – திலக் வர்மா பேட்டி
இந்திய அணி உலக கோப்பையை வெல்வதை இந்திய அணியின் தேசிய கொடியுடன் பார்க்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். ஏற்கனவே இந்திய அணி உலக கோப்பை போட்டிகளில் முக்கியமான ஆட்டத்தில் வெற்றி பெறும் போதெல்லாம் சுனில் கவாஸ்கர் மைதானத்தில் இருந்து இந்திய அணியை ஊக்கப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.



