சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கும் 2026 டி20 உலக கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்க காத்திருக்கிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருந்தது.
சூரியகுமார் யாதவுக்கு அறிவுரை வழங்கிய : இர்பான் பதான்
அதனை தொடர்ந்து தற்போது நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக இருப்பதால் நிச்சயம் இந்த தொடரிலும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கு முன்னதாக பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்திய அணிக்கு சில அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் ரோஹித் சர்மா விட்டு சென்ற மரபை சூரியகுமார் யாதவ் எடுத்துச் செல்வது மிகவும் கடினம் என்று தனது கருத்தினை கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ரோகித் சர்மா அமைத்த பாரம்பரியத்தை சூரியகுமார் யாதவால் தூக்கிச் செல்ல முடியுமா என்பது தான் இங்கு மிக பெரிய கேள்வி.
ஏனெனில் ரோகித் சர்மா இரண்டு முறை ஐசிசி கோப்பையை கைப்பற்றும் போதும் தானாக முன்வந்து பேட்டிங்கில் பொறுப்பை ஏற்று அதிரடியாக விளையாடினார். அதேபோன்று ஒவ்வொரு போட்டிக்கும் முன்னதாக வீரர்களிடம் போட்டி திட்டம் குறித்து அவர் மிக சிறப்பாக விவாதித்துள்ளார். அணியின் சூழலை சரியாக புரிந்து கொண்ட அவர் கேப்டனாக முன் நின்று அதிரடியாக விளையாடாதாலேயே கோப்பைகளை கைப்பற்ற முடிந்தது.
இதையும் படிங்க : 2021-ல் நடந்த சம்பவம்.. விராட் கோலி செய்த செயல்.. இதையெல்லாம் மறக்கவே மாட்டேன் – இஷான் கிஷன் நெகிழ்ச்சி
அந்த வகையில் சூரியகுமார் யாதவும் வீரர்களை சரியாக கட்டமைத்து அவர்களுக்கு உண்டான திட்டத்தை போட்டியின் போது கொடுப்பது மட்டுமின்றி தானாக முன்வந்து கேப்டன் என்கிற பதவிக்கு ஏற்றார் போல் சிறப்பாக விளையாடினால் மட்டுமே இந்த கோப்பையை கைப்பற்ற முடியும் என சூரியகுமார் யாதவுக்கு சில அறிவுரைகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.



