2021-ல் நடந்த சம்பவம்.. விராட் கோலி செய்த செயல்.. இதையெல்லாம் மறக்கவே மாட்டேன் – இஷான் கிஷன் நெகிழ்ச்சி

Ishan Kishan
- Advertisement -

இந்திய அணியின் இளம் இடது கை அதிரடி ஆட்டக்காரரான இஷான் கிஷன் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க முடியாமல் தவித்து வந்த வேளையில் அண்மை காலமாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி மீண்டும் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை பெற்றார். அந்த வகையில் அண்மையில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடியிருந்தார்.

விராட் கோலியின் ஆறுதல் குறித்து பேசிய : இஷான் கிஷன்

அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பில் மிகச் சிறப்பான ஆட்டத்தை நியூசிலாந்து அணிக்கு எதிராக வெளிப்படுத்திய அவர் கடைசி போட்டியின் போது சதம் அடித்தும் அசத்தியிருந்தார். ஏற்கனவே டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெற்றிருந்த வேளையில் தற்போது சஞ்சு சாம்சன் மோசமான ஃபார்மில் சிக்கி தவித்து வருகிறார்.

- Advertisement -

அதனால் நல்ல பார்மில் இருக்கும் இஷான் கிஷனை அபிஷேக் ஷர்மாவுடன் களமிறக்க வேண்டும் என்ற பேச்சுகளும் இருந்து வருகின்றன. இந்நிலையில் இந்த நியூசிலாந்து தொடரில் கலக்கிய அவர் தன்னுடைய கடினமான காலகட்டம் குறித்து சில வெளிப்படையான கருத்துக்களை பகிர்ந்து உள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

கடந்த 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக நான் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் என்னுடைய பார்ம் மிகவும் மோசமாக இருந்தது. அப்போது ஆர்.சி.பி அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு போட்டியில் நாங்கள் 165 ரன்களை துரத்திய வேளையில் 111 ரன்களுக்கு சுருண்டு மோசமான தோல்வியை சந்தித்திருந்தோம். அந்த சூழலில் என்னுடைய மனநிலை மிகவும் மோசமாக இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : பாகிஸ்தான் இல்ல.. அரையிறுதிக்கு தகுதிபெறும் அணிகள் இதுதான் – மைக்கல் வாகன் கணிப்பு

நான் மிகுந்த சோகத்துடன் ஓய்வறைக்கு முன்னர் படுத்திருந்தேன். அப்போது என்னை கவனித்த விராட் கோலி என்னிடம் வந்து தோல் மேல் கை போட்டு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார். அவர் பேசிக் கொண்டிருக்கும்போது நான் அழுது விடக்கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்து கண்ணீரை அடக்கி கொண்டேன். ஆனால் அவர் நான் ட்ரெஸ்ஸிங் ரூம் முன்பு படுத்திருந்ததை பார்த்து தேடி வந்து எனக்கு ஆறுதல் கூறியதை என்னால் எப்போதும் மறக்க முடியாது என இஷான் கிஷன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement