விளையாட வந்து 12 வருஷம் ஆயிடுச்சி.. சாக்கு போக்குலாம் வேணாம்.. சஞ்சு சாம்சன் குறித்து – யுஸ்வேந்திர சாஹல் பேச்சு

Chahal and Samson
- Advertisement -

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் துவக்க வீரருமான சஞ்சு சாம்சன் எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் முதன்மை துவக்க வீரராக இடம் பிடித்துள்ளார். ஏற்கனவே சுப்மன் கில்லின் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக அவர் டி20 அணியிலிருந்து நீக்கப்பட்ட வேளையில் சஞ்சு சாம்சன் மீண்டும் அபிஷேக் சர்மாவுடன் துவக்க வீரராக களமமிறங்கி விளையாடி வருகிறார்.

சஞ்சு சாம்சன் பேட்டிங் பார்ம் குறித்து பேசிய : யுஸ்வேந்திர சாஹல்

இவ்வேளையில் நடைபெற்று வரும் நியூசிலாந்து தொடரில் அவரது பார்ம் தற்போது மோசமாக இருந்து வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் 4 போட்டிகளில் அவர் ஒரு போட்டியில் கூட 30 ரன்களை கூட அடிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். இதன் காரணமாக டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துவக்க வீரருக்கான வாய்ப்பை அவர் இழக்கலாம் என்றும் அவருக்கு பதிலாக இஷான் கிஷன் துவக்க வீரராக விளையாட வாய்ப்புள்ளதாகவும் சிலர் கூறி வருகின்றனர்.

- Advertisement -

ஆனாலும் சஞ்சு சாம்சனை தொடர்ந்து ஆதரித்து வரும் இந்திய அணியின் நிர்வாகம் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கி வருகிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் தனது சொந்த ஊரான திருவனந்தபுரத்தில் அவர் விளையாட உள்ளதால் நிச்சயம் பார்மை மீட்டு எடுப்பார் என்று பலரும் ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த நியூசிலாந்து தொடரில் தடுமாறி வரும் சஞ்சு சாம்சன் குறித்து பேசிய அனுபவ வீரரான யுஸ்வேந்திர சாஹல் கூறுகையில் : சஞ்சு சாம்சன் கடந்த பல வருடங்களாகவே விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் மிடில் ஆர்டரில் விளையாட துவங்கிய அவர் இன்று துவக்க வீரராக உயர்ந்துள்ளார். ஒட்டுமொத்தமாக 12 ஆண்டுகள் அவர் கிரிக்கெட் விளையாடி உள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : 2026 டி20 உலககோப்பை தொடரில் இந்த 2 அணிகள் 300 ரன்களை அடிக்கும் – ரவி சாஸ்திரி கணிப்பு

எனவே நியூசிலாந்து தொடரில் அவர் தடுமாறி வருவதற்கு அழுத்தத்தை ஒரு காரணமாக கூறி சாக்கு போக்கு சொல்ல முடியாது. அவர் தற்போது எப்படி விளையாடுகிறார்? என்பது அவருக்கே நன்றாக தெரியும். எனவே அவரது பிரச்சினைகளை கலைந்து அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என யுஸ்வேந்திர சாஹல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement