இஷான் கிஷன் ஆடிய இந்த இன்னிங்ஸ் அபிஷேக் சர்மாவை மறக்க வச்சிடுச்சி – முகமது கைப் கருத்து

Kaif and Ishan
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஜனவரி 23-ஆம் தேதி ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது நியூசிலாந்து அணி நிர்ணயித்த 209 ரன்கள் என்கிற இலக்கினை இந்திய அணி 15.2 ஓவர்களிலேயே துரத்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது.

இஷான் கிஷனை பாராட்டிய : முகமது கைப்

இந்த இரண்டாவது போட்டியில் சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா என இருவருமே அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் காரணமாக போட்டி எவ்வாறு செல்லப்போகிறது என்று பலரும் சந்தேகப்பட்ட வேளையில் மூன்றாவது வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் 32 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 76 ரன்கள் குவித்து ஆட்டத்தை இந்தியாவின் வசம் கொண்டு வந்து தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

- Advertisement -

அவரது சிறப்பான ஆட்டம் காரணமாக அவருக்கு அந்த போட்டிக்கான ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. அபிஷேக் சர்மா விரைவில் ஆட்டமிழந்தால் இந்திய அணி நிச்சயம் 200 ரன்களை அடிக்காது என்றும் பெரியளவில் தடுமாற்றத்தை சந்திக்கும் என்று சமீப காலமாகவே பேச்சுகள் நிலவி வந்த வேளையில் இஷான் கிஷனின் அதிரடியான ஆட்டம் அந்த கருத்துக்களை எல்லாம் மாற்றியுள்ளது என முன்னாள் வீரர்கள் பலரும் அவரது இந்த இன்னிங்ஸை பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப்பும் இஷான் கிஷனின் இந்த இன்னிங்ஸ் குறித்து தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி ரன்களை எடுத்தால் இந்திய அணியில் இடம் பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் இஷான் கிஷன். அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தற்போது இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : அவசரப்பட்டு சஞ்சு சாம்சன் விடயத்தில் இந்த ஒரு தப்பான முடிவை மட்டும் எடுத்துடாதீங்க – அஷ்வின் கருத்து

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அவர் விளையாடிய ஆட்டம் அபிஷேக் சர்மா முதல் பந்தில் ஆட்டமிழந்ததை யாருமே நினைக்காத வண்ணம் அதனை மறக்க செய்யும் அளவிற்கு சிறப்பாக இருந்தது. அந்த அளவிற்கு உண்மையிலேயே அவரது அதிரடி மிகச் சிறப்பாக இருந்ததாகவும் முகமது கைப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement