அவசரப்பட்டு சஞ்சு சாம்சன் விடயத்தில் இந்த ஒரு தப்பான முடிவை மட்டும் எடுத்துடாதீங்க – அஷ்வின் கருத்து

Ashwin and Samson
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணியானது முதல் இரண்டு போட்டிகளிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்தாலும் இந்த தொடரில் இந்திய அணியின் துவக்க வீரரான சஞ்சு சாம்சனின் ஆட்டம் ஏமாற்றம் அளிக்கும் விதமாக இருந்து வருகிறது. முதல் இரண்டு ஆட்டங்களிலுமே அவர் தடுமாற்றமான செயல்பாட்டை வெளிப்படுத்தி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.

சஞ்சு சாம்சன் விடயத்தில் அவசரப்படக்கூடாது : ரவிச்சந்திரன் அஷ்வின்

அதேவேளையில் திலக் வர்மா இல்லாததால் அவரது இடத்தில் களமிறங்கி விளையாடி வரும் இஷான் கிஷன் மிகச் சிறப்பான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக இரண்டாவது போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தாலும் தனது அதிரடியின் மூலம் இந்திய அணியை மீட்டெடுத்த அவர் வெற்றிக்கு அழைத்துச் சென்று ஆட்டநாயகன் விருதினையும் வென்றிருந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக சஞ்சு சாம்சனை நீக்கிவிட்டு இஷான் கிஷனை அந்த இடத்தில் களமிறக்க வேண்டும் என்ற பேச்சுக்களும் ஆரம்பித்துவிட்டன. விக்கெட் கீப்பரான சஞ்சு சம்சனுக்கு சரியான மாற்றுவீராக இஷான் கிஷன் தான் இருப்பார் என்றும் சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவசரப்பட்டு சஞ்சு சாம்சனை நீக்கிவிட்டு அந்த இடத்தில் இஷான் கிஷனை விளையாட வைக்கக்கூடாது என்றும் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் தமிழக முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சில கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

- Advertisement -

ஒருவேளை சஞ்சு சாம்சனை துவக்க வீரருக்கான இடத்தில் இருந்து நீக்கிவிட்டால் அது அநியாயமானதாக இருக்கும். ஏனெனில் அபிஷேக் சர்மாவுடன் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த இரண்டு போட்டிகளை மட்டும் வைத்துக்கொண்டு எந்த ஒரு முடிவையும் எடுக்கக்கூடாது. சஞ்சு சாம்சன் அவசரத்தாலோ, பதட்டத்தாலோ இந்த தொடரில் ஆட்டம் இழக்கவில்லை.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவின் அந்த ரோலை எடுத்து தான் நான் விளையாடி வரேன்.. இனியும் தொடரும் – அபிஷேக் சர்மா பேட்டி

அதிரடியாக விளையாட வேண்டும், ரன் குவிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் விளையாடி ஆட்டமிழந்து வருகிறார். ஒரு பேட்ஸ்மேன் இப்படி அதிரடியாக விளையாட நினைத்து ஆட்டமிழப்பது சகஜம் தான். போட்டியின் அன்றைய நாள் சாதகமாக இல்லை என்றால் யாருக்குமே அப்படித்தான் நடக்கும். எனவே அவசரப்பட்டு சஞ்சு சாம்சனை நீக்கக்கூடாது என அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement