இன்றைய 3 ஆவது போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள 2 மாற்றங்கள் – உத்தேச பிளேயிங் லெவன் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது 2 போட்டியிலும் வெற்றி பெற்று இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

3 ஆவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது கௌஹாத்தி நகரில் ஜனவரி 25-ஆம் தேதியான இன்று இரவு 7 மணிக்கு துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இந்த தொடரை கைப்பற்றுடன் முனைப்புடன் இந்திய அணி விளையாட இருப்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இன்றைய மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குறிப்பிட்ட இரண்டு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த போட்டியை காயம் காரணமாக தவறவிட்ட அக்சர் பட்டில் இந்த போட்டியில் மீண்டும் விளையாடும் அளவிற்கு உடற்தகுதியை எட்டி விட்டால் நிச்சயம் அவர் இன்றைய போட்டியில் விளையாடுவார்.

அதேபோன்று இரண்டாவது போட்டியில் ஓய்வெடுத்துக் கொண்ட வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா இன்றைய மூன்றாவது போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றபடி இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்த பெரிய மாற்றமும் இருக்காது. அதன்படி நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் பிளேயிங் லெவன் இதோ :

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முன்னேறிய ஹார்டிக் பாண்டியா.. ரோஹித் சர்மாவையும் – தாண்ட வாய்ப்பு

1) அபிஷேக் சர்மா, 2) சஞ்சு சாம்சன், 3) இஷான் கிஷன், 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) ஷிவம் துபே, 7) ரிங்கு சிங், 8) அக்சர் படேல், 9) அர்ஷ்தீப் சிங், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) வருண் சக்கரவர்த்தி.

Advertisement