பிளான் போட்டு அவுட்டாக்க வரும் எதிரணிகளை அடித்து.. இந்தியாவை ஜெய்க்க வைக்க இதான் காரணம்.. அபிஷேக் பேட்டி

Abhishek Sharma 2
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் ஜனவரி 21ஆம் தேதி நாக்பூரில் துவங்கியது. அத்தொடரின் முதல் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 239 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 84 (35), ரிங்கு சிங் 44* (16), கேப்டன் சூரியகுமார் 32 (22), ஹர்டிக் பாண்டியா 25 (16) ரன்கள் எடுத்தனர்.

அடுத்ததாக விளையாடிய நியூசிலாந்து இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்து வீச்சில் கடுமையாக போராடியும் 20 ஓவரில் 190/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 78, மார்க் சேப்மேன் 39 ரன்களை எடுத்தும் தோல்வியைடு தவிர்க்க முடியவில்லை. இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி, சிவம் துபே தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

ஆட்டநாயகன் அபிஷேக்:

அதனால் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 1 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு 84 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் அனைத்து எதிரணிகளும் தம்மை வீழ்த்துவதற்கு திட்டத்துடன் வருவதாக அபிஷேக் தெரிவித்துள்ளார்.

அதை உடைத்து இந்தியாவை வெற்றி பெற வைப்பதற்காக தாம் ஸ்பெஷலான திட்டங்களை வகுத்து அதற்காக பயிற்சிகளை எடுத்து தயாராகி வருவதாகவும் அபிஷேக் தெரிவித்துள்ளார். அந்தத் திட்டங்கள் பற்றி அவர் விவரித்து பேசியது பின்வருமாறு. “நாங்கள் முதல் நாளிலிருந்து வகுக்கும் திட்டங்களை பின்பற்றுகிறோம். உங்களால் அனைத்து பந்துகளையும் அடிக்க முடியுமா? என்று கண்டுபிடிக்கிறேன்”

- Advertisement -

அதிரடி திட்டங்கள்:

“அல்லது 200 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து விளையாடக்கூடிய உங்களுடைய நோக்கத்தை தொடர முடியுமா? என்று பார்க்கிறேன். அனைத்து அணிகளும் எனக்கு எதிராக திட்டங்களை வகுத்து வருகின்றன. அதை எதிர்கொள்ளும் தன்மைகள் அனைத்தும் என்னுடைய தயாராகும் முறைகளைப் பற்றியது. நான் என்னுடைய உள்ளுணர்வுகளைப் பின்பற்றி விளையாடுகிறேன்”

“என்னுடைய வேலை அதிக ரிஸ்க்கானது என்று கருதவில்லை. அதே சமயம் நான் கச்சிதமான மண்டலத்தில் விளையாடுகிறேன் என்றும் சொல்லவில்லை. ஆனால் முதல் சிக்ஸரை பெரிதாக அடிப்பதற்காக நான் பயிற்சிகளை எடுக்கிறேன். எப்போதும் குறிப்பிட்ட தூரத்தில் நான் சிக்ஸர் அடிக்க முயற்சிப்பதில்லை. டைமிங்கை அதிகம் பின்பற்றக் கூடிய பேட்ஸ்மேனான நான் பந்தை பார்த்து சூழ்நிலைகளுக்குத் தகுந்தார் போல் விளையாடுகிறேன்”

இதையும் படிங்க: 48 ரன்ஸ்.. போராடிய நியூஸிலாந்தை வீழ்த்திய இந்தியா.. நாக்பூரில் 10 வருடங்கள் கழித்து அபார வெற்றி

“அதற்காக நான் எனது வலைப்பயிற்சியில் திட்டமிடுகிறேன். நீங்கள் உங்களின் பேட்டிங் செய்யும் வீடியோக்களை பார்த்தால், பவுலர்கள் உங்களுக்கு எதிராக எங்கே பவுலிங் செய்கிறார்கள் என்ற ஐடியா கிடைக்கும். ஸ்லிப் ஃபீல்டிங்கை நான் மகிழ்ச்சியுடன் செய்கிறேன். அதற்காக நான் பயிற்சியாளர் திலீப் சாருடன் வேலை செய்கிறேன்” என்று கூறினார்.

Advertisement