கேப்டனை டார்ச்சர் பண்ணாம.. வாயை மூடிக்கிட்டு குல்தீப் அதை செஞ்சா போதும்.. ரோஹித் கிண்டல் அட்வைஸ்

Rohit Sharma
- Advertisement -

ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் துவங்குகிறது. கடந்த முறை ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா 2024 டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதனால் இம்முறை நடப்புச் சாம்பியனாக களமிறங்கும் இந்திய அணி மீண்டும் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இம்முறை டி20 உலகக் கோப்பை நடைபெறும் இந்திய மைதானங்களில் வெற்றி பெறுவதற்கு மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவது அவசியமாகும். அது போன்ற சூழ்நிலையில் இந்திய அணியில் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் வருண் சக்கரவர்த்தி பலம் சேர்க்கிறார். அதே போல நம்பிக்கை நட்சத்திரம் குல்தீப் யாதவ் இந்திய அணியில் தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

இந்தியாவுக்காக சவால்:

இந்நிலையில் அவர்கள் இருவரையும் ஒன்றாக பிளேயிங் லெவனில் விளையாட வைப்பது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர்கள் இருவரையும் எப்படி ஒன்றாக விளையாட வைப்பது என்பதற்கான முடிவை எடுப்பதே இந்திய அணி நிர்வாகத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்”

“ஏனெனில் நீங்கள் 2 வேகப்பந்து வீச்சாளர்களை விளையாட வைத்தால் மட்டுமே அவர்கள் இருவரையும் ஒன்றாக இந்தியாவுக்காக களத்தில் விளையாட வைக்க முடியும்” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் இம்முறை குல்தீப் யாதவுக்கு உங்களுடைய அறிவுரை என்ன என்று ரோஹித் சர்மாவிடம் தொகுப்பாளர் கேட்டார். அதற்கு ஒன்றுமில்லை கேப்டனை தொல்லை செய்யாமல் வாயை மூடிக்கொண்டு பந்தை போட்டால் போதும் என்று ரோஹித் கலகலப்பான அறிவுரையை தெரிவித்தார்.

- Advertisement -

ரோஹித் அட்வைஸ்:

அதாவது ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய குல்தீப் யாதவ் அடிக்கடி டிஆர்எஸ் கேட்குமாறு சொல்வார். அவருடைய ஆர்வக்கோளாறான பேச்சைக் கேட்டு டிஆர்எஸ் எடுத்துப் பார்த்தால் பெரும்பாலும் ஏமாற்றமே கிடைக்கும். எனவே கேப்டன் சூரியகுமாரை அடிக்கடி டிஆர்எஸ் எடுக்குமாறு கேட்டு தொல்லை செய்யாதீர்கள் என்று அவருக்கு ரோஹித் கிண்டலான அறிவுரையைக் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: இதைவிட ஸ்ட்ராங்கான டீம் இருக்காது.. இன்றைய முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் – பிளேயிங் லெவன் இதோ

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “அந்த ஜென்டில்மேனுக்கு என்னிடம் எந்த அறிவுரையும் இல்லை. தயவு செய்து பின்னே சென்று அமைதியாக பந்தை மட்டும் வீசுங்கள். நீங்கள் ஒவ்வொரு பந்திலும் அவுட் கேட்க முடியாது” என்று கூறினார். இதை தொடர்ந்து இந்தியா தங்களது முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement