அதுக்கு கேப்டன்ஷிப் காரணமில்லை.. அப்படின்னா முதல் 7 மேட்ச்ல சதமடிச்சுருக்க மாட்டேன்.. சூரியகுமார் பேட்டி

Suryakumar Yadav 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அத்தொடர் விரைவில் நடைபெறும் 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கத்தில் நடைபெற உள்ளது. எனவே அந்த தொடரில் வெற்றி பெற்று சமீபத்திய ஒருநாள் தொடரில் வரலாறு காணாத தோல்வி பரிசளித்த நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி தயாராகியுள்ளது.

அத்தொடரில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் ஃபார்முக்கு திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. தாமதமாக 31 வயதில் அறிமுகமான அவர் டி20 கிரிக்கெட்டில் எப்படி போட்டாலும் அடித்து நொறுக்கு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் குறுகிய காலத்தில் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறிய அவர் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்கேற்றினார்.

- Advertisement -

கேப்டன்ஷிப் காரணமில்லை:

அதன் காரணமாக இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்ற பெயரைப் பெற்ற சூரியகுமாருக்கு நாளடைவில் கேப்டன்ஷிப் பொறுப்பு கிடைத்தது. ஆனால் கேப்டனாக பொறுப்பேற்றது முதல் பேட்டிங்கில் அவர் பெரிய ரன்கள் குவிக்க முடியாமல் திண்டாடி வருகிறார். அதனால் கேப்டன்ஷிப் அழுத்தம் அவருடைய பேட்டிங்கை பாதித்துள்ளதா? என்ற கேள்வியும் காணப்படுகிறது.

இந்நிலையில் கேப்டன்ஷிப் பொறுப்புக்கும் தம்முடைய பேட்டிங் ஃபார்முக்கும் சம்பந்தமில்லை என்று சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ஏனெனில் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் 7 போட்டிகளில் தாம் 2 அரை சதங்கள் ஒரு சதமடித்து அசத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் இந்தியா போன்ற பெரிய அணியை தலைமைத் தாங்கும் போது அழுத்தம் இருக்கும்”

- Advertisement -

சூரியகுமார் விளக்கம்:

“யாருமே அழுத்தமின்றி விளையாட முடியாது. ஆம் கேப்டன்ஷிப் பொறுப்பேற்ற பின் என்னுடைய ஃபார்மில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் 7 – 8 போட்டிகளில் நான் ஒரு சதம் மற்றும் சில அரை சதங்கள் அடித்ததையும் நீங்கள் பார்க்க வேண்டும். எனவே பேட்டிங்கில் இப்படிப்பட்ட சரிவுகள் நடப்பது சகஜமானதாகும். அதற்காக நான் கடினமாக வேலை செய்கிறேன். அணியை தலைமைத் தாங்குவதும் என்னுடையக் கையில் இருக்கிறது”

இதையும் படிங்க: இதைவிட ஸ்ட்ராங்கான டீம் இருக்காது.. இன்றைய முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் – பிளேயிங் லெவன் இதோ

“அதற்காக முயற்சிக்கும் எனக்கு நாளையே நல்லது நடக்கலாம் என்பது யாருக்குத் தெரியும். அந்த ஃபார்ம் உலகக்கோப்பை முடியும் வரை நிற்காமல் செல்லக்கூடும். கடந்த 3 – 4 வருடங்களில் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் எனக்கு எம்மாதிரியான பேட்டிங் அடையாளத்தை கொடுத்தது என்று பார்க்கிறேன். என்னுடைய ஆட்டத்தை புரிந்துள்ள நான் எங்களுடைய அணி எப்படி விளையாட வேண்டும் என்றும் பார்க்கிறேன். அதற்கு தகுந்தார் போல் பயிற்சிகளை எடுத்துள்ள நான் அதை போட்டிகளில் பிரதிபலிக்க முயற்சிக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement