இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. அதன் வாயிலாக நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் முறையாக இந்தியா வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது. அந்த தோல்விக்கு இந்திய அணி பெரும்பாலான சமயங்களில் சுமாராக விளையாடியது முக்கிய காரணமானது.
குறிப்பாக கடைசி 2 போட்டிகளில் டார்ல் மிட்சேல், வில் எங், கிளன் பிலிப்ஸ் ஆகியோர் நங்கூரமாக விளையாடி இந்தியாவை தோற்கடித்தனர். மறுபுறம் மிடில் ஓவர்களில் மிகவும் மோசமாக பந்து வீசிய இந்திய பவுலர்கள் அவர்களை விரைவில் அவுட்டாக்காதது தோல்விக்கு காரணமானது. பொதுவாக எதிரணி பேட்ஸ்மேன்கள் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கும் போது அதை சரியான திட்டத்தை வகுத்து ஃபீல்டிங்கை மாற்றி பவுலர்களை பயன்படுத்தி உடைக்க வேண்டியது கேப்டனுடைய பொறுப்பாகும்.
அனுபவமற்ற கில்:
ஆனால் அதை இந்திய கேப்டன் சுப்மன் கில் கடைசி 2 போட்டிகளிலுமே சரியாக செய்யாதது தோல்விக்கு வித்திட்டது என்றே சொல்லலாம். குறிப்பாக 3வது போட்டியில் எதுவுமே வேலையாகாத சமயத்தில் கேஎல் ராகுல் ராகுலிடம் ஒப்படைத்த அவர் பவுண்டரி எல்லையருகே சென்று ஃபீல்டிங் செய்தார். அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் இந்திய பவுலர்களை கட்டுப்படுத்தினார்.
இந்நிலையில் இந்தூரில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் கேப்டன்ஷிப் மிகவும் சுமாராக இருந்ததாக முன்னாள் நியூசிலாந்து வீரர் இயன் ஸ்மித் விமர்சித்துள்ளார். அந்த வகையில் கேப்டனாக கில்லுக்கு அனுபவமில்லாததும் இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமானதாக ஸ்மித் தெரிவித்துள்ளார். எனவே கில் எப்போதும் உள்வட்டத்திற்குள் நின்று அணியை கட்டுப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
ஸ்மித் அட்வைஸ்:
“சுப்மன் கில் கேப்டன்ஷிப் கலையை இப்போது தான் கற்கத் துவங்கியுள்ளார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் களத்தில் நிறைய நடக்கிறது. ஒரு கட்டத்தில் கேஎல் ராகுல் கூட அர்ஷ்தீப் சிங் அருகே சென்று வழிகாட்டுதல்களைக் கொடுக்கிறார். அது துணைக் கேப்டன்கள் செய்ய வேண்டிய வேலையாகும். உண்மையில் அதை செய்ய வேண்டிய சுப்மன் கில் பவுண்டரியில் நிற்கிறார். அடிப்படையில் அப்படி செய்வது அவரை ஆட்டத்திலிருந்தே வெளியே எடுக்கிறது”
இதையும் படிங்க: உண்மையில் இந்தியாவில் இதை செய்ததில் மகிழ்ச்சி.. ஒருநாள் தொடர் வெற்றி குறித்து – நியூசி கேப்டன் பேட்டி
“உங்களால் சிறப்பாக செயல்பட முடியாவிட்டாலும் உங்கள் அணி அழுத்தத்தின் கீழ் தள்ளாடும் போது முடிவுகளை எடுக்கக்கூடிய இடத்தில் கேப்டனாக நீங்களும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். அதே சமயம் கில்லை நான் பாராட்டுகிறேன். ஏனெனில் நிறைய முன்னாள் கேப்டன்கள் இருக்கும் அணிக்கு அவர் கேப்டனாக இருக்கிறார். உங்களிடம் ராகுல், விராட் கோலி, ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய முன்னாள் வீரர்களும் சீனியர்களும் இருக்கிறார்கள். அங்கே இளமையான நீங்கள் பொறுப்பை எடுப்பது எளிதல்ல” என்று கூறினார்.


