வெறும் 40 ரன்ஸ் அடிக்க முடியல.. 232 வருட உலக சாதனையை உடைத்த பாகிஸ்தான் உள்ளூர் அணி

PAK Team
- Advertisement -

பாகிஸ்தானில் 2026 பிரசிடெண்ட் கோப்பை உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் ஜனவரி 15ஆம் தேதி கராச்சியில் பாகிஸ்தான் டிவி மற்றும் சுய் நார்தர்ன் கேஸ் பைப்லைன்ஸ் அணிகள் மோதிய மோதிய போட்டி துவங்கியது. அப்போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் டிவி அணி 166 ரன்களை எடுத்தது.

அதிகபட்சமாக முகமது தஹா 38, அமட் பட் 46* ரன்களை எடுத்த நிலையில் சுய் நார்தர்ன் அதிகபட்சமாக செஷாத் குள் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய சுய் நார்தர்ன் அணி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 238 ரன்களை குவித்து முன்னிலை பெற்றது. அதிகபட்சமாக ஒமைர் யூசுப் 42, சபிஃபுல்லா பங்கஷ் 71 ரன்களை எடுத்த நிலையில் பாகிஸ்தான் தொலைக்காட்சி அணிக்கு அதிகபட்சமாக அலி உஸ்மான் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

40 ரன்களை வைத்து:

அடுத்ததாக 2வது இன்னிங்ஸில் விளையாடிய பாகிஸ்தான் டிவி அணி முடிந்தளவு போராடியும் 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக முகமது தஹா 27, முகமது சுலைமான் 25 ரன்களை எடுத்தார்கள். சுய் நார்தர்ன் அணிக்கு அதிகபட்சமாக செஷாத் குள் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இறுதியாக வெறும் 40 என்ற சுலபமான இலக்கை துரத்திய பாகிஸ்தான் சீனியர் டெஸ்ட் அணியின் கேப்டன் சான் மசூத் தலைமையிலான சுய் நார்தர்ன் அணி எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணிக்கு ஆசான் அவாய்ஸ் 2, அலி ஜராப் 0, ஒமைர் யூசுப் 6, அப்துல் சமத் 5, கேப்டன் மசூத் 0, சாத் கான் 2, சஜித் கான் 3, முகமத் அலி 6, செசாத் குள் 0 என பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் 10 ரன்கள் கூட தாண்டவில்லை.

- Advertisement -

232 வருட உலக சாதனை:

அதிகபட்சமாக சபிஃபுல்லா பங்கஷ் பெங்கஸ் 14 ரன்கள் எடுத்தும் சுய் நார்தர்ன் அணியை வெறும் 37 ரன்களுக்கு பாகிஸ்தான் டிவி அணி ஆல் அவுட்டாக்கியது. அதனால் வெறும் 2 ரன்கள் த்ரில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் டிவி அணிக்கு அலி உஸ்மான் 6, அமட் பட் 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதன் வாயிலாக முதல் தர கிரிக்கெட்டில் மிகவும் குறைந்தபட்ச இலக்கை (40) கட்டுப்படுத்தி வென்ற அணி என்ற உலக சாதனையை பாகிஸ்தான் டிவி அணி படைத்துள்ளது.

இதையும் படிங்க: ஆஸியில் அம்பலமான பாகிஸ்தானின் ஆகாய சூரர்கள்.. வரிசையாக நேர்ந்த 3 அவமானம்.. ஸ்பெஷல் பதிவு

இதற்கு முன் 1794ஆம் ஆண்டு லண்டனில் இருக்கும் பழைய லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற எம்சிசி அணிக்கு எதிராக ஓல்ட்பீல்ட் அணி 41 ரன்களை கட்டுப்படுத்தியதே முந்தைய சாதனை. அப்போட்டியில் ஓல்ட்பீல்ட் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தற்போது அந்த 232 வருட சாதனையை பாகிஸ்தான் டிவி அணி உடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement