118/4 டூ 284/7.. நியூஸிலாந்திடம் சரிந்த இந்தியாவை தூக்கி நிறுத்திய ராகுல்.. அதிகபட்ச ஸ்கோர் அடித்து அபாரம்

KL rahul
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. வதோதராவில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் இரண்டாவது போட்டி ஜனவரி 14ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்கியது.

மதியம் 1.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து ஆட்டத்தை துவங்கிய இந்திய அணிக்கு 70 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த ரோஹித் சர்மா 24 ரன்னில் அவுட்டானார். மறுபுறம் கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி அரை சதமடித்து 56 (53) ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

க்ளாஸ் ராகுல்:

ஆனால் அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நன்றாகத் துவங்கிய போதிலும் 23 ரன்னில் அவுட்டானார். போதாக்குறைக்கு ஸ்ரேயாஸ் ஐயர் 8 ரன்னில் விக்கெட்டை இழந்ததால் 118/4 என இந்தியா தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த கே.எல். ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

5வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த அந்த ஜோடியில் ரவீந்திர ஜடேஜா 27 ரன்களை எடுத்த போது விக்கெட்டை இழந்தார். ஆனால் மறுபுறம் பொறுப்புடன் விளையாடிய கேஎல் ராகுல் அரை சதமடித்த பின் அதிரடியைத் துவங்கினார். அவருடன் சேர்ந்து 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நித்திஷ் ரெட்டி 20 ரன்களை எடுத்த போது அவுட்டானார்.

- Advertisement -

காப்பாற்றிய ராகுல்:

அடுத்து வந்த ஹர்ஷித் ராணா 2 ரன்னில் அவுட்டானாலும் இந்தப் பக்கம் நியூசிலாந்துக்கு சவாலாக மாறிய ராகுல் தம்முடைய 8வது சதத்தை அடித்து அசத்தினர். தொடர்ந்து அசத்தலாக விளையாடிய அவர் கடைசி வரை அவுட்டாகாமல் 11 பவுண்டரி 1 சிக்ஸருடன் 112* (92) ரன்களை விளாசி சிறப்பான ஃபினிஷிங் கொடுத்தார். கூடவே முகமது சிராஜ் 2* ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவரில் இந்தியா 284/7 ரன்கள் குவித்து அசத்தியது.

இதையும் படிங்க: 1403 நாட்கள் கழித்து.. விட்டதை பிடித்த கிங் கோலி.. 37 வயதில் ரோஹித்தை முந்தி சாதனை மகுடம்

இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்து ராகுல் அசத்தியுள்ளார். அந்த வகையில் இப்போட்டியில் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் தம்முடைய தரத்தை நிரூபித்து சதம் அடித்து இந்தியாவை காப்பாற்றினார் என்றே சொல்லலாம். நியூசிலாந்து அணிக்கு கிறிஸ்டியன் கிளார்க் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக 285 ரன்கள் இலக்கை இந்தியா கட்டுப்படுத்தும் முனைப்புடன் பந்து வீசி வருகிறது.

Advertisement