ரசிகனாக மாறிய ஜெய் ஷா.. வதோரராவில் கிங் கோலி, ஹிட்மேன் ரோஹித்துக்கு வழங்கப்பட்ட கெளரவம்

Virat kohli Rohit Sharma
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அந்தத் தொடரின் முதல் போட்டி ஜனவரி 11ஆம் தேதி குஜராத்தில் உள்ள வதோதரா மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியின் இடைவெளியில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு பரோடா வாரியம் சார்பில் கௌரவம் வழங்கப்பட்டது.

அதாவது கடந்த 15 வருடங்களுக்கு மேலாக விளையாடி வரும் விராட் கோலி, ரோஹித் சர்மா இந்திய அணியின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளனர். அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு அதிக வெற்றிகளைப் பெற்று கொடுத்துள்ள விராட் கோலி வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். மறுபுறம் ரோஹித் தலைமையில் 2024 டி20 உலகக்கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

வதோதராவில் கெளரவம்:

அத்துடன் தங்களது பேட்டிங்கில் ஏராளமான சாதனைகள் படைத்துள்ள அவர்கள் பல இளம் வீரர்களுக்கு ரோல் மாடல்களாக திகழ்கிறார்கள். அந்த சூழ்நிலையில் கடந்த 2024ஆம் ஆண்டு வதோதராவில் பரோடா வாரியம் சார்பில் புதிதாக மைதானம் கட்டமைக்கப்பட்டது. அந்த மைதானத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய இப்போட்டி தான் முதல் சர்வதேச ஆடவர் போட்டியாக நடைபெற்றது.

எனவே தங்களது மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கை கௌரவிக்கும் வகையில் விராட், ரோஹித்தை பரோடா வாரியம் கௌரவித்தது. அதற்காக தயாரிக்கப்பட்ட பிரத்தியேக அலமாரியில் அவர்களது புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. அதற்குள் சென்ற விராட் கோலி, ரோஹித் சர்மா மைதானத்தின் ஒலிபெருக்கியில் பெயர் அறிவிக்கப்பட்ட போது வெளியே வந்தார்கள்.

- Advertisement -

ரசிகனாக மாறிய ஜெய் ஷா :

அதை ஐசிசி தலைவர் ஜெய் ஷா தன்னையே மெய்மறந்து ஒரு ரசிகனைப் போல் மாறி அவர்களை மகிழ்ச்சியுடன் பார்த்தார். தொடர்ந்து அவர்களை பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ், பரோடா வாரிய தலைவர் பிரணவ் அமீன் மற்றும் இதர நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள். அதை ஏற்றுக் கொண்ட விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் அலமாரியில் தங்களது புகைப்படம் அருகே கையொப்பமிட்டனர்.

இதையும் படிங்க: சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்து புதிய உச்சத்தை தொட்ட விராட் கோலி – விவரம் இதோ

வதோதராவில் அடிக்கடி சர்வதேச போட்டிகள் நடைபெறுவது அரிதான ஒன்றாகும். எனவே அடுத்த முறை இந்தியா விளையாடும் போது விராட், ரோஹித் ஓய்வு பெற்றிருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதனாலேயே இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாக போற்றப்படும் அவர்களுக்கு பரோடா வாரியம் முதல் வாய்ப்பிலேயே இந்த கௌரவத்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement