தெ.ஆ’விடம் தோற்க இதான் காரணம்.. அதான் இந்திய அணிக்கு இந்த 15 நாள் பிளானை கொண்டு வரோம்.. கில் பேட்டி

Shubman Gill 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 2012க்குப்பின் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோல்வியடையாமல் உலக சாதனையுடன் வெற்றி நடைபெற்று வந்தது. அந்த வெற்றி நடை கடந்த 2024ஆம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியா சந்தித்த ஒயிட்வாஷ் தோல்வியுடன் நிறைவுக்கு வந்தது. அந்த தோல்விக்கான பழியை தேர்வுக்குழு விராட் கோலி, ரோஹித் சர்மா மேலே போட்டு கழற்றி விட முயற்சித்தது.

அதற்கு முன் அவர்களாகவே ஓய்வு பெற்ற நிலையில் சுப்மன் கில் தலைமையில் இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரை இந்தியா சமன் செய்தது. அப்படியே சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரையும் இந்தியா வென்றது. அதனால் தொடர்ச்சியாக அசத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மீண்டும் 25 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் ஒய்ட்வாஸ் படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

தோல்விக்கான காரணம்:

அதன் காரணமாக சொந்த மண்ணில் எப்படி வெல்ல வேண்டும் என்பதையே இந்தியா மறந்து விட்டதா என்று ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். அந்த நிலையில் இனிமேல் ஒவ்வொரு தொடருக்கு முன் இந்திய வீரர்கள் 15 நாட்கள் கொண்ட பயிற்சி முகாமில் பங்கேற்க வேண்டும் என்று கேப்டன் சுப்மன் கில் பரிந்துரைத்துள்ளார். அதை பிசிசிஐ ஏற்றுக் கொண்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் 2025 ஆசியக் கோப்பை டி20 தொடரில் விளையாடிய இந்திய அணி டெஸ்ட் தொடருக்கு தயாராக போதுமான நேரம் கிடைக்காததே தென்னாப்பிரிக்காவிடம் தோற்க காரணம் என்று சுப்மன் கில் கூறியுள்ளார். வருங்காலத்தில் அதைத் தவிர்ப்பதற்காகவே 15 நாட்கள் பயிற்சி முகாம் திட்டத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அந்த பரிந்துரையில் எனக்கு ஆர்வம் இருந்தது. ஏனெனில் கடைசி 2 தொடர்களில் எங்களுக்கு தயாராக போதுமான நேரம் கிடைக்கவில்லை”

- Advertisement -

புதிய திட்டம்:

“இந்தியாவில் விளையாடுவது எளிது கிடையாது. வேறு நாட்டில் 4வது நாளில் விளையாடுவது வித்தியாசமானது. ஒருவேளை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் நாங்கள் வெற்றி பெற்றிருந்தால் கூட எங்களுடைய புதிய திட்டத்தில் பெரிய வித்தியாசம் இருந்திருக்காது. ஏனெனில் உலகம் முழுவதிலும் டெஸ்ட் போட்டிகளை வெல்ல வேண்டுமெனில், அதற்கு நாங்கள் நன்றாகத் தயாராக வேண்டும் என்பது எனக்குத் தெரியும்”

இதையும் படிங்க: நியூசி அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

“என்னைப் பொறுத்த வரை முறையாக தயாராவது முக்கியம். ஆனால் கடந்த 2024/25 ஆஸ்திரேலியா தொடருக்குப் பின்பும் ஆசியக் கோப்பை முடிந்த பின்பும் எங்களுக்குத் தயாராக போதுமான நேரம் கிடைத்ததாக எனக்குத் தெரியவில்லை. எனவே இந்த புதிய திட்டத்தைக் கொண்டு வருவதில் நான் ஆர்வத்துடன் இருந்தேன். ஒவ்வொரு டெஸ்ட் தொடருக்கு முன்பாக நாங்கள் நன்றாக தயாராவதற்கு தேவையான முடிவை எடுக்க வேண்டியது பற்றி நாங்கள் மனதில் வைத்திருந்தோம்” என்று கூறினார்.

Advertisement