2026 டி20 உ.கோ இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.. என் தலைவிதி மறுபடியும் அங்கே கொண்டுப்போகும்.. கில் பேட்டி

Shubman Gill
- Advertisement -

ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை வரும் பிப்ரவரி 7ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் துவங்க உள்ளது. அந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியிலிருந்து கடைசி நேரத்தில் சுப்மன் கில் கழற்றி விடப்பட்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் ஏற்கனவே 2023ஆம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி தொடர்ந்து சிறப்பாக விளையாடத் தவறிய அவரை இந்திய அணி கழற்றி விட்டிருந்தது.

இருப்பினும் கடந்த வருடம் அவரை ஆல் ஃபார்மட் கேப்டனாக வளர்க்க நினைத்த தேர்வுக்குழு திடீரென இந்திய டி20 அணியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுத்து ஓப்பனிங்கில் விளையாடும் வாய்ப்பைக் கொடுத்தது. அந்த வாய்ப்பில் தடுமாற்றமாக விளையாடிய கில் கடைசி 18 டி20 போட்டிகளில் அரை சதம் கூட அடிக்கவில்லை. இருப்பினும் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்ததால் அவருக்கு உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

விதி கொண்டுப்போகும்:

ஆனால் அணியை விட யாரும் பெரிதில்லை என்று கருதிய தேர்வுக்குழு கடைசி நேரத்தில் அவரை கழற்றி விட்டது அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்தது. இந்நிலையில் தம்முடைய தலைவிதி தான் கிரிக்கெட்டில் இதுவரை தம்மை இந்த நிலைமைக்கு உயர்த்தியுள்ளதாக சுப்மன் கில் தெரிவித்துள்ளார். எனவே அது மீண்டும் தம்மை இந்திய டி20 அணிக்குள் கொண்டு செல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதுவரை தம்மால் முடிந்த வரை சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுக்க முயற்சிக்க உள்ளதாகவும் கில் கூறியுள்ளார். மேலும் 2026 டி20 உலகக்கோப்பை இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று வாழ்த்துவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்பறுமாறு. “எனது வாழ்வில் நான் இருக்க வேண்டிய இடத்தில் இருப்பதாக நம்புகிறேன்”

- Advertisement -

அணிக்கு வாழ்த்துக்கள்:

“எனது விதியில் என்னவெல்லாம் எழுதப்பட்டுள்ளதோ அதை எதுவும் என்னிடமிருந்து பறிக்க முடியாது என்று நம்புகிறேன். கண்டிப்பாக ஒரு வீரராக நீங்கள் நன்றாக விளையாடி உங்களுடைய நாட்டுக்காக வெல்ல வேண்டும் என்று நம்புவீர்கள். ஆனால் தேர்வுக்குழுவின் முடிவை நான் மதிக்கிறேன். டி20 அணிக்கு நான் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் நமக்காக கோப்பையை வெல்வார்கள் என்று நான் உண்மையாக நம்புகிறேன்”

இதையும் படிங்க: அவரோட எதிர்காலம் என்ன? முகமது ஷமி தேர்வு செய்யப்படாதது குறித்து ஆதங்கம் தெரிவித்த – இர்பான் பதான்

“ஒரு விளையாட்டு வீரராக நிகழ்காலத்தில் இருப்பது முக்கியம். எந்தளவு பேட்ஸ்மேன் அல்லது பவுலராக நீங்கள் எதைப் பற்றியும் சிந்திக்காமல் நிகழ்காலத்தில் இருந்து உங்களுடைய முதன்மை திறமையை வெளிப்படுத்துகிறீர்களோ அந்தளவுக்கு வெற்றியடைய வாய்ப்புள்ளது. எனவே நிகழ்காலத்தில் என்னத் தேவையோ அதை நான் செய்ய முயற்சிப்பது முக்கியம். அதுவே நமது வாழ்க்கையை எளிதாக்கும். அதுவே நீங்கள் அமைதியாக மகிழ்ச்சியாக இருக்க விரும்பக்கூடிய இடைவெளியாகும்” என்று கூறினார்.

Advertisement