இதனால தான் ஒன்டேவில் ஆடுறதுக்கு.. பேசாம கோலி மொத்தமா ரிட்டையராகலாம்ன்னு சொன்னேன்.. சஞ்சய் மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar
- Advertisement -

ஆஷஸ் 2025/26 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து தோல்வியை சந்தித்த போதிலும் ஜோ ரூட் ஆஸ்திரேலியா மண்ணில் முதல் முறையாக சதமடித்து அசத்தினர். 2019/20 வரை கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட் ஆகியோரை விட இந்தியாவின் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் மற்றும் ரன்கள் அபாரமாக விளையாடி வந்தார். இருப்பினும் 2021க்குப்பின் பெரிய சரிவை சந்தித்த அவர் 2025இல் ஓய்வு பெற்றார்.

மறுபுறம் 2021க்குப்பின் விஸ்வரூபம் எடுத்த ஜோ ரூட் அபாரமாக விளையாடி சச்சின் டெண்டுல்கருக்கு பின் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். அதைப் பார்க்கும் போதெல்லாம் தமக்கு விராட் கோலி ஓய்வு பெற்றது சோகமளிப்பதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் தம்முடைய பலவீனத்தை சரி செய்யாமலேயே விராட் கோலி ஓய்வு பெற்றதாக அவர் ஏமாற்றம் தெரிவித்தார்.

- Advertisement -

எளிதான ஒன்டே:

அத்துடன் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு ஒருநாள் போட்டிகள் தான் மிகவும் எளிதானது என்றும் அவர் கூறியிருந்தார். அப்படிப்பட்ட எளிதான ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி விளையாடுவதற்கு பேசாமல் மொத்தமாக ஓய்வு பெற்றிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதற்கு வழக்கம் போல விராட் கோலியின் ரசிகர்கள் அவருக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டாப் ஆர்டரில் விளையாடுவது மிகவும் கடினம் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் மிடில் ஆடரில் விளையாடுவதைக் காட்டிலும் டாப் ஆர்டரில் விளையாடுவது எளிது என்று அவர் கூறியுள்ளார். அதனாலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் 4வது இடத்தில் விளையாடிய விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் டாப் ஆர்டரில் விளையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

மஞ்ரேக்கர் விளக்கம்:

இது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சஞ்சய் மஞ்ரேக்கர் பேசியது பின்வருமாறு. “ஒருநாள் போட்டிகள் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு எளிதாக இருக்கிறது என்று ஏன் நான் சொல்கிறேன்? என நிறைய மக்கள் கேட்கிறார்கள். இதற்கு நீங்கள் சில வருடங்களுக்கு முன்பு சென்று இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் நீண்ட காலம் ஓப்பனிங்கில் விளையாடிய வீரர்களைப் பார்க்க வேண்டும்”

“ஒருநாள் போட்டிகளில் மேலே விளையாடிய அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் விளையாடவில்லை. மாறாக 4, 5, 6வது இடங்களில் விளையாடுவதில் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் அதே வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் மேலே விளையாட ஆர்வத்துடன் இருந்தார்கள். அங்கே தான் பதில் இருக்கிறது. அதனாலேயே ஒருநாள் போட்டிகள் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு எளிது என்று நான் நம்புகிறேன்”

இதையும் படிங்க: திலக் வர்மா விலகினால்.. தகுதியான அவரை 2026 டி20 உ.கோ அணியில் செலக்ட் பண்ணுங்க.. ஆகாஷ் சோப்ரா

“அதனாலேயே அங்கே விளையாட அனைவரும் வரிசையில் நிற்கிறார்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் 3வது இடத்தில் விளையாடுவதில் முதல் சாதகம் என்னவெனில், உங்களுக்கு எதிராக 4 ஸ்லீப் மற்றும் கல்லி ஃபீல்டர் இருக்க மாட்டார்கள். பவுலர் ஓடி வரும் போது அவர் நிச்சயம் உங்களை அவுட்டாக்க போவதில்லை என்பதும் உங்களுக்குத் தெரியும். ஏனெனில் ஒரு ஓவரில் 10 – 15 ரன்கள் கொடுக்கக்கூடாது என்றே பவுலர் முயற்சி செய்வார்” என்று கூறினார்.

Advertisement