இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் அடுத்த மாதம் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரின் இறுதிவரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது.
டி20 உ.கோ இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் : அஜின்க்யா ரஹானே கணிப்பு
இந்த டி20 உலககோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்க இருக்கும் இந்திய அணியானது ஏற்கனவே சூரியகுமார் யாதவின் தலைமையின் அறிவிக்கப்பட்டு விட்டது. அப்படி வெளியான இந்திய அணியில் மொத்தம் 15 வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. சொந்த மண்ணில் நடைபெறும் தொடர் என்பதனாலும் இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படுவதாலும் இம்முறை கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு உள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்? என்பது குறித்த கணிப்புகளை முன்னாள் வீரர்கள் பலரும் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் அனுபவ வீரரான அஜின்க்யா ரஹானே எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் இடம் பெறுவார்கள்? என்பது குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த டி20 உலககோப்பை தொடரின் எல்லா போட்டியிலும் வருண் சக்கரவர்த்தி விளையாட வேண்டும். அவர்தான் பந்துவீச்சில் முக்கியமான துருப்பு சீட்டாக இருப்பார். அதேபோன்று இன்னொரு சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவது கடினம். ஏனெனில் ரிங்கு சிங் அணியில் இடம் பெறாத போது மட்டுமே குல்தீப் யாதவால் விளையாட முடியும்.
மேலும் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார். இந்திய அணியின் பேட்டிங் வரிசை 8 வரை இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவர் ஒரு பிளேயிங் லெவனை அவர் தொகுத்து வழங்கியுள்ளார். அந்த வகையில் அஜின்க்யா ரஹானே தேர்வு செய்த இந்திய டி20 அணியின் பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : ஒவ்வொரு வருடமும் இதை நடத்துவதை ஐசிசி நிறுத்தனும்.. புதுமை போய் போர் அடிக்கும்.. உத்தப்பா கோரிக்கை
1) சஞ்சு சாம்சன், 2) அபிஷேக் சர்மா, 3) திலக் வர்மா, 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) அக்சர் படேல், 7) ரிங்கு சிங், 8) ஷிவம் துபே, 9) வருண் சக்கரவர்த்தி, 10) அர்ஷ்தீப் சிங், 11) ஜஸ்ப்ரீத் பும்ரா.



