ஒவ்வொரு வருடமும் இதை நடத்துவதை ஐசிசி நிறுத்தனும்.. புதுமை போய் போர் அடிக்கும்.. உத்தப்பா கோரிக்கை

Robin Uthappa 2
- Advertisement -

ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை வரும் பிப்ரவரி 7ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக துவங்க உள்ளது. உலகின் டாப் 20 அணிகள் பங்கேற்கும் அத்தொடரில் கோப்பையை வெல்லப் போவது யார் என்று பார்ப்பதற்கு காணப்படுகிறது. அந்தத் தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இதற்கிடையே ஜனவரி 15ஆம் தேதி ஜிம்பாப்வே மற்றும் நமீபியா நாடுகளில் ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை துவங்க உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் வருங்காலங்களில் அசத்தப் போகும் வீரர்களை அடையாளப்படுத்தும் நோக்கத்தில் அந்தத் தொடர் நடைபெற உள்ளது. அதில் ஆயுஷ் மாத்ரே தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது.

- Advertisement -

ஒவ்வொரு வருடமும் வேண்டாம்:

அடுத்ததாக வரும் ஜூன் மாதம் ஐசிசி 2026 மகளிர் டி20 உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. அந்த வகையில் இந்த வருடம் மட்டும் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் 3 ஐசிசி தொடர்கள் நடைபெற உள்ளன. குறிப்பாக ஆடவர் கிரிக்கெட்டில் மட்டும் (2023) 50 ஓவர் உலகக் கோப்பை, (2024) டி20 உலகக் கோப்பை, (2025) சாம்பியன்ஸ் ட்ராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் என ஒவ்வொரு வருடமும் ஒரு ஐசிசி தொடர் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் புதுமை என்ற பெயரில் ஒவ்வொரு வருடமும் ஒரு உலகக் கோப்பையை நடத்துவதை ஐசிசி நிறுத்த வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ஏனெனில் ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு ஐசிசி தொடர் நடைபெறுவதால் ரசிகர்களிடம் ஆர்வம் குறைவதாக அவர் கவலைத் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

உத்தப்பா கோரிக்கை:

“இந்த விளையாட்டு நிர்வாக ரீதியாக பரிணமிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஐசிசி தொடரில் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் எவ்வளவு மதிப்பை சேர்க்க முடியும்? மிகவும் நேர்மையாக மரியாதையுடன் சொல்ல வேண்டுமெனில் அதன் புதுமை தேய்ந்து போகிறது. ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டிகளில் எப்போதும் அங்கே புதுமை இருக்க வேண்டும்”

இதையும் படிங்க: நியூஸி டி20 தொடரில் காயத்தால் விலகிய திலக்.. 2026 உ.கோ விளையாடுவாரா? அவரே கொடுத்த தகவல்

“இது வீரர்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். அது எதையாவது அர்த்தப்படுத்த வேண்டும். ஒவ்வொரு தொடருக்கும் இடையே சிறிய இடைவெளி இருக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் நாம் ஐசிசி தொடர்களை கொண்டிருக்க முடியாது அல்லது வைக்கக்கூடாது. இதை நிர்வாகிகள் கவனிக்க வேண்டும். நமது விளையாட்டை உண்மையாக முன்னோக்கி நகரும் விதத்தில் பரிணமிக்க வைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement