இந்திய அணியின் 2026 டி20 உ.கோ லீக் போட்டிகளை யாருமே பாக்க மாட்டாங்க.. காரணம் இதான்.. அஸ்வின் ஓப்பன்டாக்

R Ashwin 2
- Advertisement -

ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை வரும் பிப்ரவரி 7ஆம் தேதி துவங்குகிறது. இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் அந்தத் தொடரில் கோப்பையை வெல்வதற்காக உலகின் டாப் 20 அணிகள் மோதுகின்றன. அந்த அணிகளுக்கு சவாலைக் கொடுத்து சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

அந்தத் தொடரில் இந்திய அணி தங்களது லீக் சுற்றில் அமெரிக்கா, நமீபியா, பரம எதிரி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. அந்த போட்டிகள் வரும் பிப்ரவரி 7, 12, 15, 18 ஆகிய தேதிகளில் மும்பை, டெல்லி, கொழும்பு, அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. அந்த லீக் சுற்றில் இந்தியா குறைந்தது 3 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களைப் பிடிக்க வேண்டும்.

- Advertisement -

யாரும் பார்க்க மாட்டாங்க:

அப்போது தான் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும். இந்நிலையில் 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் லீக் சுற்றுப் போட்டிகளை பெரும்பாலான ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ஏனெனில் அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய கத்துக்குட்டிகளுக்கு எதிரான போட்டிகளில் எப்படியும் இந்தியா வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.

அந்தப் போட்டிகளும் விறுவிறுப்பாக இருப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால் ரசிகர்கள் யாரும் பார்க்க மாட்டார்கள் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இம்முறை ஐசிசி டி20 உலகக் கோப்பையை யாரும் பார்க்க மாட்டார்கள். குறிப்பாக அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான 3 போட்டிகள் உங்களை உலகக் கோப்பையிலிருந்து வெளியே தள்ளும்”

- Advertisement -

அஸ்வின் வெளிப்படை:

“பொதுவாக உலகக் கோப்பை 4 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும். அதனால் அனைவரிடமும் இயற்கையாகவே ஆர்வம் உருவாகும். அப்போதெல்லாம் இந்தியா தங்களது முதல் சுற்றிலேயே இங்கிலாந்து அல்லது இலங்கை போன்ற வலுவான அணிகளை எதிர்கொள்ளும். அந்த போட்டிகளை பார்ப்பதே மிகவும் வேடிக்கையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 100க்கு 10இல் அசத்திய கபில் தேவ் விட மோசமா? சுப்மன் கில்லை ஏன் ட்ராப் பண்ணீங்க.. யோக்ராஜ் விளாசல்

கடந்த காலங்களில் டி20 உலகக் கோப்பையில் 12,16 அணிகள் மட்டுமே விளையாடின. அந்தத் தொடர்களில் சில கத்துக்குட்டி அணிகள் வலுவான அணிகளை தோற்கடித்து ஆச்சரியத்தைக் கொடுத்தன. எனவே கத்துக்குட்டி அணிகளுக்கும் வாய்ப்பைக் கொடுப்பதற்காகவே இம்முறை ஐசிசி கூடுதலாக 4 அணிகளை சேர்த்துள்ளது. இருப்பினும் அது ரசிகர்களிடம் ஆர்வத்தை உண்டாக்குமா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது.

Advertisement