இந்த பையனுக்கு சீக்கிரம் ஒருநாள் போட்டியிலும் சேன்ஸ் தாங்க.. அசத்தப்போறான் – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து

Ashwin and Abhishek
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதை அடுத்து தற்போது தொடர்ச்சியாக கிரிக்கெட் சார்ந்த தனது கணிப்புகளையும், கருத்துகளையும் சமூக வலைதளத்தின் மூலம் பகிர்ந்து வருகின்றார். அந்த வகையில் நடைபெற்று முடிந்த 2025 ஆம் ஆண்டு சிறப்பாக விளையாடிய இந்திய வீரர் குறித்தும் சில கருத்துக்களை சமூக வலைதளத்தின் மூலம் பேசியிருந்தார்.

ஒருநாள் போட்டியிலும் இவருக்கு வாய்ப்பு குடுங்க : ரவிச்சந்திரன் அஷ்வின்

அப்படி பேசிய அஸ்வின் இந்திய அணியின் நட்சத்திர இளம் துவக்க வீரரான அபிஷேக் சர்மாவை பாராட்டி பேசியதோடு மட்டுமின்றி ஒருநாள் போட்டிகளிலும் அவருக்கு விரைவில் வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற தனது கருத்தினை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அஸ்வின் அந்த வீடியோ பதிவில் கூறியதாவது : இது அபிஷேக் ஷர்மாவின் வருகை மட்டும் கிடையாது.

- Advertisement -

இந்திய அணியின் அடுத்த எதிர்காலத்தின் எக்ஸ் பேக்டர் வீரரும் அவர்தான். 2025-ல் என்னை பொருத்தவரை மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக நான் அபிஷேக் ஷர்மாவை பார்க்கிறேன். இந்த ஆண்டு முழுவதுமே அவர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். குறிப்பாக டி20 போட்டிகளில் பவர்பிளேவில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை அற்புதமாக வெளிக்காட்டியிருந்தார்.

அவருடைய அதிரடியான ஆட்டம் எதிரணிகளுக்கு நிச்சயம் பயத்தை கொடுத்திருக்கும். இப்படி பவர்பிளே ஓவர்களில் அடித்து விளையாடும் அவரை வெகு விரைவில் இந்திய ஒருநாள் அணியிலும் பார்க்க விரும்புகிறேன். உண்மையிலேயே இந்த ஆண்டு இந்திய அணியில் பேட்டிங்கில் அசத்திய வீரர் அவர்தான் என அஸ்வின் கூறியுள்ளார்.

- Advertisement -

ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியது போன்று : 2025 ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த அபிஷேக் ஷர்மா எதிரணியினரின் பந்துவீச்சாளர்களை அழுத்தத்தில் வைப்பதற்காக பவர்பிளே ஓவர்களிலேயே அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார்.

இதையும் படிங்க : திறமையான சர்பராஸ்க்கு அந்த ஒரு வாய்ப்பைக் கூட தராதது அவமானம்.. இந்திய அணியை சாடிய வெங்சர்கார்

அதிலும் குறிப்பாக இந்த 2025 ஆம் ஆண்டு மட்டும் 21 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அபிஷேக் ஷர்மா 42 ரன்கள் சராசரியுடன், 193 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 859 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துவக்க வீரராகவும் தனது இடத்தை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement