2023 உ.கோ இந்தியா ஜெய்ச்சுருக்க வேண்டியது.. ரோஹித், டிராவிட்டின் செஞ்ச இந்த தவறால் தவறிடுச்சு.. சஞ்சய் மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய அடுத்தடுத்த ஆடவர் ஐசிசி கோப்பைகளை வென்று சாதனைப் படைத்தது. அந்த வெற்றிக்கு சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் எதிரணிகளை அடித்து நொறுக்க வேண்டும் என்ற கேப்டன் ரோஹித் சர்மாவின் அணுகுமுறை முக்கிய காரணமானது. சொல்லப்போனால் அந்த அணுகுமுறையை முதல் முறையாக அவர் 2023 உலகக் கோப்பையில் கையிலெடுத்தார்.

அந்த அணுகு முறையில் ரோஹித் சர்மா தலைமையில் எதிரணிகளை சொல்லி அடித்த இந்தியா தொடர்ச்சியாக 10 வெற்றிகளுடன் இறுதிப் போட்டிக்கு சென்றது. குறிப்பாக உலகக் கோப்பைகளில் தொடர் தோல்விகளை பரிசளித்து வந்த நியூசிலாந்தை செமி ஃபைனலில் தோற்கடித்த இந்தியா உச்சகட்ட ஃபார்முடன் ஃபைனல் சென்றது. அதனால் 2011 போல சொந்த மண்ணில் இந்தியா கோப்பையை வெல்லும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.

- Advertisement -

ரோஹித், ட்ராவிட்டின் தவறு:

அதற்கு தகுந்தார் போல் ஒரு லட்சம் ரசிகர்களுக்கு முன்னிலையில் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய ரோஹி த் சர்மா இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தைக் கொடுத்தார். ஆனால் அடுத்து வந்த விராட் கோலி முதல் சூரியகுமார் வரை மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் அடிக்கத் தடுமாறினார்கள். அந்தளவுக்கு அகமதாபாத்தில் அமைக்கப்பட்டிருந்த பிட்ச் மாலை நேரத்தில் ஸ்லோவாக மாறியது முக்கிய காரணமாக அமைந்தது.

அந்த பிட்ச்சில் இந்தியா போராடி குவித்த 240 ரன்களை ட்ராவிஸ் ஹெட் அதிரடியால் எளிதாக திருப்பி அடித்த ஆஸ்திரேலியா 6வது முறையாகக் கோப்பையை தட்டிச் சென்றது. மறுபுறம் சொந்த மண்ணில் இந்திய அணி நெஞ்சை உடைக்கும் தோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில் 2023 உலகக்கோப்பை இந்தியா வென்றிருக்க வேண்டிய கோப்பை என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தவறிய உலகக் கோப்பை:

ஆனால் ஃபைனலில் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் தவறான பிட்ச்சை தேர்ந்தெடுத்ததே இந்தியா கோப்பையை தவற விடுவதற்கு காரணமானதாகவும் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி ஜியோஹாட்ஸ்டார் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “2023 உலகக் கோப்பையில் விளையாடிய இந்திய அணியால் நான் மிகவும் பெருமைப்பட்டேன்”

இதையும் படிங்க: முடிவுக்கு வந்த ஸ்மித்தின் வெற்றி நடை.. வாழ்நாளில் முதல் முறையாக சாதித்த ஜோ ரூட், ஸ்டோக்ஸ்

“ஏனெனில் அத்தொடரில் இந்தியா தான் உலகிலேயே சிறந்த அணி போல் தெரிந்தது. ஆனால் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் ஆட்டத்திற்கு வெளியே நிறைய விஷயங்களை அதிகமாக கட்டுப்படுத்த முயற்சித்தார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த பிட்ச் தவறானது. அதனால் பிட்ச்சில் வேகத்தை நிறுத்தி பந்து வீசும் போது சூரியகுமார் யாதவ் போன்ற பேட்ஸ்மேன்கள் கூட தங்களைப் போல விளையாட முடியவில்லை” என்று கூறினார்.

Advertisement