இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியிருந்தது. இந்த தொடரின் ஆரம்பத்திலேயே அடுத்த அடுத்த தோல்விகளை சிஎஸ்கே சந்தித்த நிலையில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேற வேண்டிய சூழலும் ஏற்பட்டது.
சி.எஸ்.கே அணியின் துணை கேப்டன் யார்? :
இதன் காரணமாக இந்த தொடரின் பிற்பாதியில் மீண்டும் மகேந்திர சிங் தோனி கேப்டனாக செயல்பட்டிருந்தார். இந்த ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் பல இளம் வீரர்களுக்கு சென்னை அணி வாய்ப்பினை வழங்கியது. அதில் ஆயுஷ் மாத்ரே, உர்வில் பட்டேல், டேவால்டு பிரேவிஸ் போன்ற வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியிருந்தனர்.
இப்படி இளம் வீரர்களின் ஆட்டம் சென்னை அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்தது. அதன் காரணமாக அடுத்த ஆண்டு நிச்சயம் சென்னை அணி பல்வேறு இளம் வீரர்களுடன் விளையாட இருக்கிறது. அதனை உறுதி செய்யும் விதமாக நடைபெற்று முடிந்த 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் பல்வேறு நட்சத்திர இளம் வீரர்களை விலைக்கு வாங்கியுள்ளது.
இதன் காரணமாக நிச்சயம் இந்த ஆண்டுடன் தோனி ஓய்வு பெறுவார் என்றும் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அந்த இடத்தில் நீடிப்பார் என்றும் உறுதியாகி உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 2026 ஐபிஎல் தொடருக்கான சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்படுவார் என்பது உறுதியாகிவிட்டது.
அதேவேளையில் துணை கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் ஏற்கனவே பல ஆண்டுகள் ஐபிஎல் கேப்டன்சி அனுபவம் வாய்ந்த சஞ்சு சாம்சன் களத்தில் ருதுராஜ் கெய்க்வாடுக்கு உதவியாக இருப்பார் என்பதனாலே அவரை துணை கேப்டனாக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஏலத்தில் எடுத்தது சரி தான்.. ஆனா வெங்கடேஷ் ஐயருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு இருக்குமா? – கும்ப்ளே கேள்வி
சென்னை அணிக்கு வந்ததுமே அவருக்கு கேப்டன் பதவி வழங்குவது தவறு என்பதால் இப்படி துணை கேப்டன் பதிவு வழங்கப்படுகிறது என்றும் நாளடைவில் அவர் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு கேப்டனாக மாறவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.



