கெவின் பீட்டர்சன் மாதிரி இஷான் கிஷன் இந்த ஷாட்டை சூப்பரா ஆடுறாரு – ஹர்பஜன் சிங் பாராட்டு

Harbhajan and Ishan Kishan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இளம் வீரரான இஷான் கிஷன் ஏற்கனவே இந்திய அணிக்காக மூன்று விதமான போட்டிகளிலும் அறிமுகமாகி இருந்தாலும் கடந்த ஆண்டு நிர்வாகத்தின் அனுமதியையும் மீறி செய்த சில நடவடிக்கைகளால் இந்திய அணியின் காண்ட்ராக்டில் இருந்து நீக்கப்பட்டார். அதோடு இந்திய அணியிலிருந்தும் அவர் அதிரடியாக கழட்டி விடப்பட்டார்.

இஷான் கிஷன் பீட்டர்சன் மாதிரி அசத்துறாரு : ஹர்பஜன் சிங்

அதன்பின்னர் இந்திய அணிக்கு திரும்பும் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த அவர் தொடர்ந்து தனது சிறப்பான செயல்பாட்டை டொமஸ்டிக் போட்டிகளில் வெளிப்படுத்தி அசத்தினார். அதிலும் குறிப்பாக இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடரில் ஜார்கண்ட் அணிக்காக கேப்டனாகவும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

குறிப்பாக சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதிப்போட்டியில் அதிரடியான சதம் விளாசிய அவர் ஜார்கண்ட் அணிக்காக முதல் முறையாக சையத் முஷ்டாக் அலி தொடரின் சாம்பியன் பட்டத்தையும் வென்று கோப்பையை கைப்பற்றி கொடுத்தார்.

அதன் பின்னர் தற்போது விஜய் ஹசாரே தொடரின் முதல் போட்டியிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். அந்த வகையில் நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே தொடரின் முதல் போட்டியில் விளையாடிய அவர் 33 பந்துகளில் சதம் அடித்ததோடு சேர்த்து 39 பந்துகளில் 125 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக மீண்டும் இந்திய டி20 அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. அந்த வகையில் எதிர்வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடப்போகும் அவர் 2026 டி20 உலககோப்பை தொடருக்கான அணியிலும் இடம் பிடித்து விளையாட உள்ளார்.

இதையும் படிங்க : காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் எப்போது இந்திய அணிக்கு திரும்புகிறார்? – வெளியான லேட்டஸ்ட் தகவல்

இந்நிலையில் இஷான் கிஷன் ரிவர்ஸ் ஸ்வீப் செய்யும் போது கெவின் பீட்டர்சன் போன்றே இருப்பதாக ஹர்பஜன் சிங் பாராட்டினை தெரிவித்துள்ளார். அந்தவகையில் அவர் கூறியதாவது : இஷான் கிஷன் தற்போது மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். அதிலும் முன்பை விட இப்போது அவரது பேட்டிங்கில் ஆக்ரோஷம் அதிகரித்துள்ளது. அவர் ரிவர்ஸ் ஸ்வீப் செய்து ஆடும்போது கெவின் பீட்டர்சன் போன்றே ஆடுகிறார் என ஹர்பஜன் சிங் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement