ஆஸி செய்றது அநியாயம்.. உழைக்காம ஜெய்க்க பாக்குறாங்க.. அவரை எப்படி அடிக்கிறதுன்னே தெரியல.. குக் விமர்சனம்

Alastair Cook
- Advertisement -

ஆஷஸ் 2025/26 கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் முதல் 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே கோப்பை வென்றது. மறுபுறம் பஸ்பால் அணுகுமுறையில் அதிரடியாக விளையாடி வெல்வோம் என்று சவால் விட்ட இங்கிலாந்து 2010/11க்குப்பின் ஆஸ்திரேலியாவில் வெறும் ஒரு டெஸ்ட் போட்டியைக் கூட வெல்ல முடியாமல் படுதோல்வியைச் சந்தித்தது.

அந்த நிலையில் 4வது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போன் மைதானத்தில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசி ஆஸ்திரேலியாவை வெறும் 152 ரன்களுக்கு சுருட்டி வீசியது. அதிகபட்சமாக மைக்கல் நீசர் 35, உஸ்மான் கவாஜா 29 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோஸ் டாங் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவின் அநியாயம்:

அடுத்து விளையாடிய இங்கிலாந்தை நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற வகையில் பந்து வீசிய ஆஸ்திரேலியா வெறும் 110 ரன்களுக்கு சுருட்டி வீசியது. அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 41 ரன்களை எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மைக்கேல் நீசர் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக 42 ரன்கள் முன்னிலையுடன் விளையாடும் ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 4/0 ரன்கள் எடுத்துள்ளதால் இப்போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெறுவது கேள்விக் குறியாகியுள்ளது.

முன்னதாக 21ஆம் நூற்றாண்டில் மெல்போர்ன் மைதானத்தில் முதல் நாளிலேயே 20 விக்கெட்டுகள் விழுந்த முதல் டெஸ்ட் போட்டி என்ற பெயரை இப்போட்டி பெற்றுள்ளது. அந்தளவுக்கு இப்போட்டியின் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சவாலாகவும் பவுலர்களுக்கு சாதகமாகவும் இருக்கிறது. இந்நிலையில் தங்களை தோற்கடிப்பதற்காக ஆஸ்திரேலியா ஒரு தலைப்பட்சமான பிட்ச்சை அமைத்துள்ளதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலஸ்டர் குக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

குக் விமர்சனம்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “போட்டி 2, 3, 4வது நாள் செல்லாத வரை இது டெஸ்ட் போட்டிக்கு தகுந்த சிறந்த பிட்ச் கிடையாது. ஏனெனில் அது பவுலர்களுக்கு அதிக சாதகமாக இருக்கிறது. இங்கே பவுலர்கள் விக்கெட்டுகளுக்காக கடினமாக உழைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கிறது. பிட்ச் நன்றாக இருந்திருந்தால் இரு அணிகளும் இன்னும் கொஞ்சம் நன்றாக பேட்டிங் செய்திருக்கும்”

இதையும் படிங்க: 11 ஃபோர்ஸ் 4 சிக்ஸ்.. 106 ரன்ஸ்.. டி20 உ.கோ முன் ஃபார்முக்கு வந்த ரிங்கு சிங்.. கேப்டனாக யூபிக்கு வெற்றி

“ஆம் நீங்கள் பந்தை சரியான இடத்தில் வீசினால், அது இரு பக்கத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் இது நியாயமற்ற போட்டியாக இருக்கிறது. குறிப்பாக ஸ்காட் போலண்டை எப்படி எதிர்கொள்வது என்பது எனக்கே தெரியவில்லை. இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஸ்டம்ப் லைனில் போடும் போது அவரது பந்துகள் பல மைல் தூரம் திரும்பிச் செல்கிறது” என்று கூறினார்.

Advertisement