ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாட உள்ள இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் துணை கேப்டன் சுப்மன் கில் கடைசி நேரத்தில் கழற்றி விடப்பட்டது பலரையும் மகிழ்ச்சியடைய வைத்தது. ஏனெனில் கடைசியாக விளையாடிய 18 சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறிய அவர் மோசமான ஃபார்மில் இருக்கிறார்.
அதற்காக அவரை கழற்றி விட்ட தேர்வுக்குழு இஷான் கிஷானை கடைசி நேரத்தில் தேர்ந்தெடுத்தது ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை. மறுபுறம் பேக்-அப் விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜிதேஷ் சர்மா கொடுக்கப்பட்ட வாய்ப்புகளில் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கழற்றி விடப்பட்ட ஜிதேஷ்:
இருப்பினும் 2025 சயீத் முஸ்டாக் அலி கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த இஷான் கிசான் ஃபைனலில் சதமடித்து ஜார்கண்ட் அணிக்கு கேப்டனாக கோப்பையை வெல்ல உதவினார். அதனால் அவரை பேக்-அப் கீப்பராக தேர்ந்தெடுத்த தேர்வுக்குழு ஜிதேஷ் சர்மாவை கழற்றி விட்டு ரிங்கு சிங்கை அணிக்குள் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் கடைசி நேரத்தில் செய்யப்பட்ட இந்த அதிரடியான மாற்றத்திற்கான காரணம் பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது பின்வருமாறு.
“இஷான் கிசான் பேக்-அப் கீப்பராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் சஞ்சு சாம்சன் டாப் ஆர்டரில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. அதனால் ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து வேகப்பந்து வீச்சாளர்களை அடிக்கக்கூடிய ஹிட்டர் பேட்ஸ்மேன்கள் மட்டுமே உங்களுக்குத் தேவைப்படுகிறார்கள். அது போன்ற சூழ்நிலையில் ரிங்கு சிங்கை விட சிறந்தவர்கள் இருக்கிறார்களா?”
அஸ்வின் கருத்து:
“நீங்கள் ஜிதேஷ் – ரிங்குவை ஒப்பிடலாம். ஆனால் உண்மையைப் பார்க்கும் போது ஸ்பின்னர்களுக்கு எதிராக ஜித்தேஷ் பெரிய சிக்சர்களை அடிக்கக்கூடியவர். ஆனால் டெத் ஓவர்களில் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக ரிங்கு சிங்கின் நம்பர்கள் சிறப்பாக இருக்கிறது. அது மட்டுமின்றி அவரிடம் ஃபினிஷிங் செய்வதில் பாரம்பரியம் மற்றும் அனுபவம் இருக்கிறது”
இதையும் படிங்க: ஐபிஎல் 2026: ஜடேஜா இல்லாத புதிய சிஎஸ்கே அணியின் தரமான பிளேயிங் லெவன் இது தான்.. அஸ்வின் பதிவு
“நம்முடைய இந்திய அணி அதிரடியாக விளையாடும் அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. எனவே இந்திய அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளது. தற்போதைய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வருண் சக்கரவர்த்தியை எதிரணிகள் அடிப்பதற்கு தடுமாறுகின்றன. அதனால் மிகவும் மோசமான நாள் அமைந்தால் மட்டுமே இந்திய அணி தடுமாற்றங்களை சந்திக்கக்கூடும். மற்ற படி இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது” எனக் கூறினார்.



