ஐபிஎல்ல எடுக்கலனாலும்.. முதல் நியூஸிலாந்து வீரராக சரித்திர சாதனை படைத்த கான்வேயை.. பாராட்டிய அஸ்வின்

R Ashwin 3
- Advertisement -

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றது. அத்தொடரில் 2 போட்டிகளின் முடிவில் 1 – 0* என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை வகிக்கிறது. கடைசிப் போட்டி மௌவுண்ட் மௌவுன்கனி மைதானத்தில் டிசம்பர் 17ஆம் தேதி துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 575/8 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

அதிகபட்சமாக கேப்டன் டாம் லாதம் சதமடித்து 137 ரன்கள் குவித்தார். அவருடன் இணைந்து 323 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த டேவோன் கான்வே இரட்டை சதமடித்து 227 ரன்கள் குவித்து அசத்தினார். அடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் முடிந்தளவு போராடியும் 420 ரன்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட்டானது.

- Advertisement -

கான்வே சரித்திர சாதனை:

அதிகபட்சமாக காவெம் ஹோட்ஜ் சதமடித்து 123*, ப்ரெண்டன் கிங் 63 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக ஜேக்கப் டுபி 4 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக 155 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய நியூஸிலாந்து 2வது இன்னிங்ஸில் 306/2 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் டாம் லாதம் மீண்டும் சதமடித்து 101, டேவோன் கான்வே 100 ரன்கள் குவித்தார்கள்.

இறுதியில் 462 என்ற இலக்கைத் துரத்தும் வெஸ்ட் இண்டீஸ் 4வது நாள் முடிவில் 43/0 என்ற ஸ்கோருடன் விளையாடி வருகிறது. முன்னதாக இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 227 ரன்கள் அடித்த டேவோன் கான்வே 2வது இன்னிங்ஸில் 100 ரன்கள் குவித்தார். இதன் வாயிலாக ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இரட்டை சதமும் 2வது இன்னிங்ஸில் சதமும் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சரித்திர சாதனையை கான்வே படைத்துள்ளார்.

- Advertisement -

அஸ்வின் பாராட்டு:

இருப்பினும் 2026 ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியும் அவரை வாங்கவில்லை. இதற்கு முன் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அவர் 2023 சீசனில் பெரிய ரன்கள் குவித்து தோனி தலைமையில் 5வது கோப்பையை வெல்ல உதவினார். இருப்பினும் அதன் பின் காயத்தால் தடுமாறியதால் கழற்றி விடப்பட்ட அவரை சிஎஸ்கே உட்பட எந்த அணியும் வாங்கவில்லை.

இதையும் படிங்க: 10 வருஷம் ஆச்சு.. ஒருவழியா டி20 போட்டிகளில் முக்கிய மைல் கல்லை எட்டிய சஞ்சு சாம்சன் – விவரம் இதோ

இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்படாததற்காக வருத்தப்படாத கான்வே நியூசிலாந்துக்காக சரித்திர சாதனை படைத்துள்ளதை ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் ட்விட்டரில். “டேவோன் கான்வே ஐபிஎல் ஏலத்தில் வேண்டுமானால் விலை போகாமல் இருந்திருக்கலாம். ஆனால் அதை வெளியே வைத்த அவர் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமும், சதமும் அடித்துள்ளார். உலகம் நம்மை எப்படி பார்க்கிறது என்பது நமது கையில் இல்லை. அதே சமயம் நாம் நமது தொழிலை எப்படி செய்கிறோம் என்பது நம் விருப்பம். வெல்டன் கான்வே” என்று பாராட்டியுள்ளார்.

Advertisement