என் தம்பி சஞ்சு அடிப்பொலி சேட்டா.. இந்தியாவின் 2026 டி20 உ.கோ ஃடிபன்ஸ் லோடிங் ஆகுது.. அஸ்வின் பதிவு

R Ashwin
- Advertisement -

ஐசிசி 2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி இந்தியாவில் துவங்குகிறது. அந்தத் தொடரில் விளையாடுவதற்காக சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் துணை கேப்டன் சுப்மன் கில் கழற்றி விடப்பட்டுள்ளதற்கு பெரும்பாலான ரசிகர்கள் வரவேற்பு தெரிவிக்கிறார்கள்.

ஏனெனில் 2023இல் அறிமுகமான அவர் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக பெரிய ரன்கள் தடுமாறியதால் கழற்றி விடப்பட்டார். அதனால் இந்திய அணி அபிஷேக் சர்மா – சஞ்சு சாம்சனுக்கு ஓப்பனிங்கில் விளையாடும் வாய்ப்பு கொடுத்தது. அந்த வாய்ப்பில் அபிஷேக் ஷர்மா நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறி சாதித்த நிலையில் சஞ்சு சாம்சன் 3 சதங்கள் அடித்து ஒரு வழியாக நிலையான இடத்தைப் பிடித்தார்.

- Advertisement -

தரமான இந்திய அணி:

இருப்பினும் திடீரென சுப்மன் கில்லை ஆல் ஃபார்மட் கேப்டனாக வளர்த்த நினைத்த தேர்வுக்குழு டி20 அணியின் துணைத்தலைவராக தேர்ந்தெடுத்து ஓப்பனிங்கில் வாய்ப்பு கொடுத்தது. அந்த வாய்ப்பில் தடுமாற்றமாக விளையாடிய கில் கடைசி 18 டி20 போட்டிகளில் ஒரு அரை சதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறினார். மறுபுறம் ஆசியக் கோப்பையில் மிடில் ஆர்டரில் விளையாடி வெற்றியில் பங்காற்றிய சாம்சன் தென்னாப்பிரிக்க தொடரில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.

அதனால் 2026 டி20 உலகக் கோப்பையில் சாம்சன் விளையாடுவாரா? என்பது கேள்விக்குறியானது. இருப்பினும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் காயமடைந்த கில்லுக்கு பதிலாக விளையாடிய அவர் 168 ஸ்ட்ரைக் ரேட்டில் தாக்கத்தை ஏற்படுத்தினார். அதனால் கடைசி நேரத்தில் கில்லை கழற்றி விட்ட தேர்வுக்குழு சாம்சனை தேர்ந்தெடுத்துள்ளது.

- Advertisement -

அஸ்வின் பதிவு:

அதே போல 2025 சயீத் முஸ்டாக் அலி கோப்பை ஃபைனலில் சதமடித்து ஜார்க்கண்ட் வெற்றி பெற வைத்த இசான் கிசான் பேக்கப் கீப்பராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதனால் ஜிதேஷ் சர்மா கழற்றி விடப்பட்டு ஃபினிஷிங் செய்யும் திறமைக்கொண்ட ரிங்கு சிங் கடைசி நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மற்றபடி அபிஷேக் முதல் வருண் சக்கரவர்த்தி வரை தரமான வீரர்கள் இந்தியாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

இதையும் படிங்க: டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரர்கள் அறிவிக்கப்படாதது ஏன்? – காரணம் இதோ

இந்நிலையில் தரமான ஃபார்மில் இருக்கும் வீரர்களைக் கொண்டுள்ள அணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் இந்தியா 2026 டி20 உலகக் கோப்பையை மீண்டும் வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பின்வருமாறு. “இந்தியா சாம்பியன் பட்டத்தை தக்க வைப்பது (ஃடிபன்ஸ்) லோடிங் ஆகிறது. சூப்பரான அணி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ரிங்கு வந்துள்ளதை பார்ப்பது நன்றாக உள்ளது. என்னுடைய தம்பி சஞ்சுவுக்காக மகிழ்ச்சியடைகிறேன். இனிமேல் அவர் அபிஷேக் ஷர்மாவுடன் ஓப்பனிங் விளையாடுவார். அடிப்பொலி சேட்டா” என்று கேரளா ஸ்டைலில் பதிவிட்டுள்ளார்.

Advertisement