துணைக் கேப்டன் கில் திடீரென கழற்றி விடப்பட்டு இஷான் சேர்க்கப்பட்டது ஏன்? அகர்கர் விளக்கம்

Ajit Agarkar
- Advertisement -

ஐசிசி 2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி இந்தியாவில் துவங்க உள்ளது. அந்தத் தொடரில் தங்களது சொந்த மண்ணில் நடப்புச் சாம்பியனாக களமிறங்கும் இந்திய அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அந்த சூழ்நிலையில் டி20 உலகக் கோப்பையில் விளையாடப் போகும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அணியில் துணைக் கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டு திடீரென இஷான் கிசான் சேர்க்கப்பட்டது பலரையும் மகிழ்ச்சியடைய வைத்தது. ஏனெனில் 2023இல் அறிமுகமான கில் அதிரடியாக பெரிய ரன்களை குவிக்க தடுமாறியதால் கழற்றி விடப்பட்டார். அவருக்கு பதில் வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சன் ஓப்பனிங்கில் 3 சதங்கள் அடித்து நிலையான இடத்தைப் பிடித்தார்.

- Advertisement -

சுப்மன் கில் நீக்கம்:

இருப்பினும் திடீரென சுப்மன் கில்லை ஆல் ஃபார்மட் கேப்டனாக வளர்க்க நினைத்த அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு டி20 அணியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுத்தது. ஆனால் அந்த வாய்ப்பில் ஓப்பனிங்கில் தடுமாற்றமாக விளையாடிய கில் கடைசி 18 போட்டிகளில் அரை சதமடிக்க முடியாமல் திண்டாடினார். அதனால் விமர்சனங்கள் எழுந்த நிலையில் காலில் காயமடைந்த அவருக்கு பதிலாக நேற்று வாய்ப்பு பெற்ற சாம்சன் 168 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி தாக்கத்தை உண்டாக்கினார்.

இந்நிலையில் சுப்மன் கில் தற்சமயத்தில் ரன்கள் அடிக்க தடுமாறுவதாலேயே கழற்றி விடப்பட்டுள்ளதாக அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். அதே போல சயீத் முஸ்டாக் அலி 2025 கோப்பை இறுதிப்போட்டியில் சதமடித்த இசான் கிசான் ஜார்க்கண்டை வெற்றி பெற வைத்தார். எனவே ஃபார்முக்கு திரும்பிய அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக அகர்கர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அகர்கர் விளக்கம்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் எம்மாதிரியான தரமான வீரர் என்பது நமக்குத் தெரியும். இருப்பினும் தற்சமயத்தில் அவர் ரன்கள் அடிக்கவில்லை. அதனால் துரதிஷ்டவசமாக கடந்த டி20 உலகக் கோப்பை போல இம்முறையும் அவர் தவற விடுகிறார். அனைத்தையும் தாண்டி இது அணியின் சேர்க்கையை பொறுத்து முடிவெடுக்கப்பட்டுள்ளது”

இதையும் படிங்க: ஐசிசி 2026 டி20 உ.கோ இந்திய அணி அறிவிப்பு: கில்லுக்கு டாட்டா, இஷான் கம்பேக் 2 தமிழக வீரர்கள்.. லிஸ்ட் இதோ

“கில் இல்லாததால் இதற்கு முன் துணைக் கேப்டனாக இருந்த அக்சர் பட்டேல் மீண்டும் அப்பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அசத்தும் இஷான் கிசான் நல்ல ஃபார்மில் இருக்கிறார். இதற்கு முன் இந்தியாவுக்காக விளையாடியுள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்துள்ளார். அவர் இல்லாத சமயத்தில் ரிஷப் பண்ட், துருவ் ஜுரேல் விளையாடினார்கள். எனவே இது யாருக்கும் எதிரானது கிடையாது. தற்சமயத்தில் இசான் சிறந்தவர் என்று நாங்கள் கருதுகிறோம்” எனக் கூறினார்.

Advertisement