240 ரன்ஸ்.. தொடரும் பகை.. அண்டர்-19 ஆசியக் கோப்பையிலும் பாகிஸ்தானுடன் நட்புக்கரம் நீட்டாத இந்தியா

IND vs PAK
- Advertisement -

துபாயில் அண்டர்-19 ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அத்தொடரில் டிசம்பர் 14ஆம் தேதி துபாயில் நடைபெற்ற 5வது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் உள்ள பரம எதிரிகள் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டி மழையால் தாமதம் அடைந்தது.

அதனால் அந்தப் போட்டி இருதரப்புக்கும் தலா 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அப்போது இந்திய கேப்டன் ஆயுஷ் மாத்ரே மற்றும் பாகிஸ்தான் கேப்டன் பர்ஹான் யூசுப் கை கொடுத்து கொள்வார்களா என்று எதிர்பார்த்தது நடக்கவில்லை.

- Advertisement -

தொடரும் பகை:

அண்டை நாடுகளான இந்தியா மாற்றும் பாகிஸ்தானுக்கிடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நிலவி வருகிறது. அந்த சூழ்நிலையில் சில மாதங்களுக்கு முன் காஷ்மீரில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நிகழ்த்திய தாக்குதலில் 26 அப்பாவி இந்தியர்கள் இயற்கை எய்தினார்கள். அதற்கு இந்திய அரசாங்கம் பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கைகள் எடுத்து தக்க பதிலடி கொடுத்தது.

அந்த நிலையில் கடந்த 2025 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி கைகுலுக்காமல் வெளியேறியது பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. அதே போல இறுதிப்போட்டியில் வென்ற பின் பாகிஸ்தான் வாரியத் தலைவர் மோசின் நக்வி கைகளால் ஆசியக் கோப்பையை வாங்க முடியாது என்று இந்தியா மறுத்து விட்டது. அதனால் கையோடு கோப்பையை எடுத்துச் சென்ற அவர் இதுவரை இந்தியாவுக்கு கொடுக்கவில்லை.

- Advertisement -

இந்தியா 240 ரன்கள்:

அந்த சூழ்நிலையில் இத்தொடரில் பகைமையை மறந்து இந்தியா – பாகிஸ்தான் கைகுலுக்கிக்கொள்ள ஐசிசி அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதையும் தாண்டி ஜூனியர் ஆசியக் கோப்பையிலும் பாகிஸ்தான் கேப்டனுடன் இந்திய கேப்டன் கை குலுக்கவில்லை. அதனால் ஜூனியர் கிரிக்கெட்டிலும் பகை தொடரும் நிலையில் முதலில் விளையாடிய இந்தியா 46.1 ஓவரில் 240 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

இதையும் படிங்க: பிக்பேஷ்: 2 பந்தில் 5 ரன்ஸ்.. கிங்ன்னா அது கோலி மட்டுமே.. ஏமாந்த ஆஸியில் பல்ப் வாங்கிய பாபர் அசாம்

இந்திய அணிக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வைபவ் சூரியவன்சி 5 (6) ரன்னில் அவுட்டானார். அதே போல விகான் மல்கோத்ரா 12, வேதாந்த் திரிவேதி 7 ரன்களில் அவுட்டானார்கள். இருப்பினும் பொறுப்பாக விளையாடிய கேப்டன் ஆயுஷ் மாத்ரே 38, ஆரோன் ஜார்ஜ் 85, கனிஸ்க் சௌஹான் 47, அபிஞான் குண்டு 21 ரன்கள் அடித்து கை கொடுத்தார்கள். பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக முகமது சயாம் 3, அப்துல் சபிக் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்கள்.

Advertisement