50 பந்தில் 101 ரன்ஸ்.. பட்டைய கிளப்பிய ஜெய்ஸ்வால்.. கில்லுக்கு பதிலாக விளையாட கம்பீருக்கு சிக்னல்

Jaiswal 101
- Advertisement -

இந்தியாவில் சயீத் முஸ்டால் அலி 2025 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அத்தொடரில் டிசம்பர் 14ஆம் தேதி புனேவில் நடைபெற்ற எலைட் குரூப் பி பிரிவின் ஆட்டத்தில் மும்பை மற்றும் ஹரியானா அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹரியானா 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 234/3 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் அன்கீத் குமார் 89 (42), நிஷாந்த் சிந்து 63* (38) ரன்களை எடுத்தார்கள். மும்பைக்கு அதிகபட்சமாக சைரஜ் பாட்டில் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக 235 ரன்களை துரத்திய மும்பை அணிக்கு ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடினார்.

- Advertisement -

பட்டைய கிளப்பிய ஜெய்ஸ்வால்:

அவருடன் இணைந்து 53 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அஜிங்க்ய ரஹானே 21 (10) ரன்களை விளாசி அவுட்டானார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரை சதத்தை அடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் எதிர்புறம் ஜோடி சேர்ந்த சர்பராஸ் கான் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் அரை சதமடித்து 64 (25) ரன்களை 256 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்து வந்த அங்கிரீஸ் ரகுவன்சி 7, சுயன்ஸ் சேட்ஜ் 13, கேப்டன் சர்துள் தாகூர் 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். ஆனால் மறுபுறம் அவர்களுக்கும் சேர்த்து பட்டைய கிளப்பும் ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் சதமடித்து 16 பவுண்டரி 1 சிக்சருடன் சதத்தை விளாசி 101 (50) ரன்கள் குவித்து மும்பையின் வெற்றியை உறுதி செய்து அவுட்டானார்.

- Advertisement -

கம்பீருக்கு சிக்னல்:

இறுதியில் சைரஜ் பாட்டில் 8* (3), அதர்வா அன்கோலேகர் 10* (2) ரன்கள் எடுத்தனர். அதனால் 17.3 ஓவரிலேயே 238/6 ரன்கள் குவித்த மும்பை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. ரியானாவுக்கு அதிகபட்சமாக சமந்த் ஜாக்கர் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. மும்பையின் இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஜெயஸ்வால் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதையும் படிங்க: துவக்க வீரர்களை தவிர நாங்கள் அனைவரும் எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய தயார் – திலக் வர்மா பேச்சு

இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் காலிறுதியில் சதமடித்து தங்கப்பதக்கம் வெல்ல உதவினார். இருப்பினும் அவரை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இந்திய அணியில் கழற்றி விட்டுள்ளார். ஆனாலும் தொடர்ந்து அசத்தி வரும் ஜெய்ஸ்வால் துணைக் கேப்டன் என்ற பெயரில் கடைசி 17 டி20 இன்னிங்ஸில் ஒரு அரை சதம் கூட அடிக்காத சுப்மன் கில்லுக்கு பதிலாக இந்தியாவுக்காக விளையாடத் தயாராக இருக்கிறேன் என்ற சிக்னலை கொடுத்துள்ளார்.

Advertisement