அந்த 3 பாறாங்கல் எடையை தாங்க முடியாம தடுமாறும் கில்லுக்கு பதிலாக.. சாம்சனை ஆட வைங்க.. ஃகைப் பேட்டி

Mohammed Kaif 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தும் சுப்மன் கில் சர்வதேச டி20 போட்டிகளில் கடைசி 17 இன்னிங்சில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. 2023ஆம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் தொடர்ச்சியாக அதிரடியாக விளையாடத் தடுமாறினார்.

அதனால் அவரை கழற்றி விட்ட இந்திய அணி அபிஷேக் சர்மா – சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளித்தது. அந்த வாய்ப்பில் அபிஷேக் சர்மா நம்பர் ஒன் பேட்ஸ்மேனாகி அசத்தலாக விளையாடி வருகிறார். மறுபுறம் மிடில் ஆர்டரில் தடுமாறி வந்த சாம்சங் ஓப்பனிங்கில் வந்ததும் 3 சதங்கள் அடித்து ஒரு வழியாக இந்திய அணியில் நிலையான இடத்தைப் பிடித்தார்.

- Advertisement -

தலையில் பாறாங்கல்:

ஆனால் தற்போது திடீரென தேர்வுக்குழு சுப்மன் கில்லை ஆல் ஃபார்மட் கேப்டனாக வளர்க்க விரும்புகிறது. அதற்காக டி20 அணியின் துணை கேப்டனாக அவரை தேர்ந்தெடுத்துள்ள தேர்வுக்குழு ஓப்பனிங்கில் விளையாடும் வாய்ப்பைக் கொடுத்துள்ளது. அந்த வாய்ப்பில் இதுவரை கில் அசத்த முடியாமல் திண்டாடி வருகிறார். மறுபுறம் ஆசியக் கோப்பையில் மிடில் ஆடரில் அசத்திய சாம்சனை இத்தொடரில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மொத்தமாக பெஞ்சில் அமர வைத்துள்ளார்.

இந்நிலையில் இளம் வீரரான சுப்மன் கில்லிடம் ஒரே சமயத்தில் அனைத்து விதமான கேப்டன்ஷிப் பொறுப்புகளையும் கொடுப்பது தவறான அணுகுமுறை என்று முன்னாள் வீரர் முகமது ஃகைப் தெரிவித்துள்ளார். அதனால் பாறாங்கல்லை தலையில் வைத்தது போல அழுத்தத்தை தாங்க முடியாத காரணத்தாலேயே அவர் டி20 கிரிக்கெட்டில் தடுமாறுவதாக ஃகைப் தெரிவித்துள்ளார். எனவே அவருக்கு இடைவெளி கொடுத்து சாம்சனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தெரிவிக்கும் ஃகைப் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

அதிகப்படியான எடை:

“சுப்மன் கில் ஒரே சமயத்தில் அதிகப்படியான பொறுப்புகளைப் பெறுகிறார் என்பதை இதற்கு முன்பும் நான் தெரிவித்துள்ளேன். அவருக்கு டெஸ்ட், ஒருநாள் கேப்டன்ஷிப் பொறுப்புடன் டி20 துணை கேப்டன்ஷிப் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த வீரராலும் இவ்வளவு எடையை ஒரே சமயத்தில் தாங்குவது சாத்தியமற்றது. பொறுப்புகள் படிப்படியாக கொடுக்க வேண்டும். கில் எப்படி அவுட்டாகிறார் என்பதைப் பாருங்கள்”

இதையும் படிங்க: கம்பீர் செய்றது அநியாயம்.. துணைக் கேப்டனை தூக்கிட்டு அவருக்கு சான்ஸ் கொடுங்க.. ஃகைப் விமர்சனம்

“ஸ்லிப்பில் கேட்ச் கொடுக்கும் அவர் இறங்கி சென்று அபிஷேக் ஷர்மா போல ஆக்ரோஷமாக அடிக்க முயற்சித்து டைமிங் இல்லாமல் அவுட்டாகிறார். அப்படி அனைத்தையும் முயற்சித்தும் வேலையாகாத அவருக்கு இடைவெளி கொடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்று நினைக்கிறேன். அதற்கு பதிலாக சஞ்சு சாம்சன் போன்ற நிரூபிக்கப்பட்ட அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்காத தரமான வீரருக்கு வாய்ப்பளிக்கலாம்” என்று கூறினார்.

Advertisement