தெ.ஆ அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

IND vs RSA
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நேற்று முன்தினம் கட்டாக் நகரில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் :

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று டிசம்பர் 11-ஆம் தேதி சண்டிகர் மாநிலத்தில் உள்ள முள்ளான்பூர் நகரில் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இந்திய அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்று இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற இந்திய அணி முனைப்பு காட்டும்.

- Advertisement -

அதேவேளையில் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வகையிலும், இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்யவும் தென்னாப்பிரிக்க அணியும் முனைப்பு காட்டும் என்பதனால் இந்த போட்டியானது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்க வீரர்களும் தற்போது அங்கு தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இன்றைய இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்பது குறித்த உத்தேச பட்டியலை இந்த பதிவில் காணலாம். அந்தவகையில் இந்த போட்டியிலும் துவக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடர்வார்கள். 3-ஆம் இடத்தில் சூரியகுமார் யாதவும், 4-ஆம் இடத்தில் திலக் வர்மாவும், 5-ஆம் இடத்தில் ஹார்டிக் பாண்டியாவும் இடம்பெறுவார்கள்.

- Advertisement -

மேலும் 6-ஆம் இடத்தில் ஷிவம் துபேவும், 7-ஆவது இடத்தில் ஜிதேஷ் சர்மாவும், 8-ஆவது இடத்தில் அக்சர் பட்டேலும் விளையாடுவார்கள். 9-ஆம் இடத்தில் வருண் சக்கரவர்த்தியும், 10-ஆவது இடத்தில் ஜஸ்ப்ரீத் பும்ராவும், 11-ஆம் இடத்தில் அர்ஷ்தீப் சிங்கும் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. ஏற்கனவே முதல் போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் இரண்டாவது போட்டியில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது.

இதையும் படிங்க : சுப்மன் கில்லுக்கு அந்த பதவி குடுத்தப்பவே சஞ்சு சாம்சன் காலி.. வேற வழியில்ல – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து

அந்தவகையில் தெ.ஆ அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ : 1) அபிஷேக் சர்மா, 2) சுப்மன் கில், 3) சூரியகுமார் யாதவ், 4) திலக் வர்மா, 5) ஹார்டிக் பாண்டியா, 6) ஷிவம் துபே, 7) ஜிதேஷ் சர்மா, 8) அக்சர் படேல், 9) வருண் சக்கரவர்த்தி, 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) அர்ஷ்தீப் சிங்.

Advertisement