தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் இந்தியா 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றது. 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கத்தில் நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று முன்னிலை பெற்றதுள்ளது. அத்தொடரில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் கழற்றி விடப்பட்டு ஜிதேஷ் சர்மா வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
நீண்ட காலம் மிடில் ஆர்டரில் தடுமாற்றமாக விளையாடி வந்த சாம்சன் ஓப்பனிங்கில் 3 சதங்கள் அடித்து அசத்தினார். இருப்பினும் தற்போது திடீரென சுப்மன் கில்லை துணை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ள இந்திய அணி அவரை ஓப்பனிங்கில் விளையாட வைத்துள்ளது. அதனால் மிடில் ஆர்டரில் விளையாடும் வாய்ப்பு பெற்ற சாம்சன் 2025 ஆசியக் கோப்பையில் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
முழுசா வாய்ப்பைக் கொடுங்க:
இருப்பினும் தொடர்ச்சியாக அதிரடியாக பெரிய ரன்கள் குவிக்க தவறியதால் அவரை கழற்றி விட்ட கௌதம் கம்பீர் இத்தொடரில் ஜிதேஷ் சர்மாவுக்கு வாய்ப்பளித்துள்ளார். இந்நிலையில் சாம்சனை போல அல்லாமல் ஜிதேஷ் சர்மாவுக்காவது தொடர்ச்சியாக வாய்ப்பளியுங்கள் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“இது நியாயமான முடிவு. ஏனெனில் முன்னோக்கிச் செல்கையில் சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் விளையாடுவது கடினம் என்று நீங்கள் சிந்திக்கிறீர்கள். ஏனென்றால் தன்னுடைய மொத்தக் கேரியரிலும் சாம்சன் பெரும்பாலும் டாப் 3 இடங்களில் மட்டுமே விளையாடியுள்ளார். டாப் ஆர்டரில் விளையாடியவர் மிடில் ஆர்டரில் வந்து வேலை செய்வது கடினம். ஆசியக் கோப்பையில் மிடில் ஆர்டரில் சாம்சன் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார்”
அடிக்கடி மாற்றாதீங்க:
“இருப்பினும் இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை வரும் போது நீங்கள் ஒரு திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். அந்த வகையில் தற்போது நீங்கள் ஜித்தேஷ் சர்மாவை செயல்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் அவரை மட்டுமே வைத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும். ஆனால் அதில் மாற்றங்களை செய்தால் நீங்கள் வருங்காலத்தில் சிரமத்தையே சந்திப்பீர்கள்” என்று கூறினார்.
இதையும் படிங்க: சுப்மன் கில் ஆட்டமே இது கிடையாது.. டி20 போட்டிகளில் அவர் செய்யும் தப்பு இதுதான் – இர்பான் பதான் கருத்து
அது பற்றி மற்றொரு முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா. “சாம்சன் டாப் 3 இடங்களில் விளையாடவில்லை என்றால், நீங்கள் ஒரு மிடில் ஆர்டரில் அசத்தக்கூடியவரை விளையாட வைக்கலாம். எனவே இது சரியான முடிவு. கடைசி 3 – 4 பந்துகளை எதிர்கொள்வது எளிதல்ல. அதில் ஸ்பெஷலிஸ்டான ஜிதேஷை தேர்ந்தெடுத்துள்ள நீங்கள் டி20 உலகக் கோப்பைக்கு முன் அதிக மாற்றங்களை செய்யக்கூடாது” என்று கூறினார்.



