புவனேஸ்வர் குமார் போல திறமையான அர்ஷ்தீப்.. அந்த வாய்ப்பை உறுதி செஞ்சுட்டாரு.. ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கத்தில் நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. கட்டாக் மைதானத்தில் டிசம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 175 ரன்கள் குவித்தது.

அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவை வெறும் 94 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா அபார வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு பவுலிங் துறையில் ஜஸ்ப்ரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அக்சர் பட்டேல், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றினர். குறிப்பாக டீ காக், ஸ்டப்ஸ் ஆகியோருடைய விக்கெட்டுகளை எடுத்த அர்ஷ்தீப் 2.3 ஓவரில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து துல்லியமாக பந்து வீசினார்.

- Advertisement -

புவனேஸ்வர் போல:

2022இல் அறிமுகமான அர்ஷ்தீப் புதிய பந்தில் ஸ்விங் செய்து விக்கெட்டுகளை எடுக்கும் திறமையைக் கொண்டுள்ளார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரராக வரலாறு படைத்த அவர் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக 2024 உலகக்கோப்பையில் 17 விக்கெட்டுகள் சாய்த்த அவர் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவியதை மறக்க முடியாது.

இந்நிலையில் புவனேஸ்வர் குமார் போல திறமைக் கொண்டுள்ள அர்ஷ்தீப் 2026 டி20 உலகக் கோப்பையில் பும்ராவுடன் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்துள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார். புவனேஸ்வர் குமார் போல புதிய பந்தில் ஸ்விங் செய்து அசத்தும் அவரைப் பற்றி ஆகாஷ் பேசியது பின்வருமாறு. “பும்ராவின் தோளுக்கு சமமாக நிற்கும் அவர் இன்று நமக்கு புவனேஸ்வர் குமாரை நினைவுப்படுத்தினார்”

- Advertisement -

2வது வேகப்பந்து வீச்சாளர்:

“ஏனெனில் இன்றும் புவனேஸ்வர் குமார் போலவே அவருடைய கையிலிருந்து பந்து வெளியே வந்தது. நல்ல கட்டுப்பாட்டைக் கொண்டுள்ள அவர் தாம் விரும்பும் வகையில் பந்தை உள்ளேயும் வெளியேயும் ஸ்விங் செய்கிறார். நீங்கள் ஸ்விங் செய்வதால் மட்டும் விக்கெட்டுகளை பெற மாட்டீர்கள். எப்படி விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்ற ஐடியாவும் அவரிடம் இருக்கிறது”

இதையும் படிங்க: உலகத்துலயே நாங்க தான் ஐசிசியில் டாப் 2.. முடிஞ்சா கழற்றி விட்டு பாருங்க.. ரோஹித், கோலி சவால்

“எப்போது அவர் பவுன்சர்கள், ஃபுல்லர், ஒய்டு ஆகிய பந்துகளை வீசுவார் என்று உங்களை கணிக்க வைக்கிறார்” என்று கூறினார். ஆனால் அப்படி நன்றாக விளையாடினாலும் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்தது முதல் அவருக்கு தொடர்ச்சியாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே அர்ஷ்தீப் 2026 உலகக்கோப்பையில் 100% விளையாடுவாரா என்பது உறுதியாகத் தெரியாது.

Advertisement