இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 25 வருடங்கள் கழித்து 0 – 2 (2) என்ற கணக்கில் சொந்த மண்ணில் தோற்றது. அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்தியா டெஸ்ட் தொடரில் சந்தித்த தோல்விக்கு தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது. அந்த வெற்றிக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா முக்கிய பங்காற்றினார்கள்.
குறிப்பாக 3 போட்டிகளில் 135, 102, 65* என 302 ரன்களை குவித்த விராட் கோலி தொடர்நாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அப்போட்டியின் முடிவில் அவர் சதத்தை அடித்த ஜெய்ஸ்வாலை முன்னோக்கிச் செல்லுமாறு சொன்னது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. அதற்கு பின்னேச் சென்ற விராட் கோலி தென்னாப்பிரிக்கா அணிக்கு கை கொடுத்தார்.
அவ்ளோ தான் மரியாதை:
அத்துடன் இந்திய அணிக்கும் அவர் வரிசையாக கை கொடுத்தார். அப்போது ரோஹித் சர்மாவை பார்த்த அவர் சிரித்த முகத்துடன் கட்டியணைத்து கை கொடுத்தார். ஆனால் அடுத்து வந்த பயிற்சியாளர் கௌதம் கம்பீரை பார்த்ததும் விராட் கோலியின் முகம் வாடிப்போனது. அப்படியே இறுக்கமான முகத்துடன் பெயருக்காக விராட் கோலி சம்பிரதாயத்துக்காக அவரிடம் கொடுத்து விட்டுச் சென்றார்.
அதற்கு காரணம் என்னவெனில் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக விளையாடி வரும் விராட், ரோஹித் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்கள். தற்போது வயது காரணமாக டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்ட அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடைபெற திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்கு முன் அவர்களை கழற்றி விட கௌதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் முயற்சித்து வருகிறார்கள்.
மாறிய பாடி லாங்குவேஜ்:
அதற்காக 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற ரோஹித்தை கழற்றி விட்ட தேர்வுக்குழு கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. ஆனால் அதற்காக அசராத அவர்கள் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா தொடர்களின் தொடர்நாயகன் விருது வென்று பதிலடி கொடுத்துள்ளனர். ஆனாலும் 2027 உலகக் கோப்பைக்கு இன்னும் 2 வருடங்கள் இருப்பதால் விராட், ரோஹித் வாய்ப்பு உறுதி செய்யப்படவில்லை என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரோஹித் சர்மாவுக்கும், விராட் கோலிக்கும் டொமஸ்டிக் கிரிக்கெட் வேண்டாம்.. காரணத்தை கூறிய – சஞ்சய் பாங்கர்
அதிலிருந்து பயிற்சியாளராக அவரிடமிருந்து விராட், ரோஹித் எந்த ஆதரவையும் பெறவில்லை. இத்தனை வருடங்கள் பெற்றுக் கொடுத்த வெற்றிகளைத் தாண்டி தொடர்ந்து ரன்கள் அடித்தால் மட்டுமே உலகக்கோப்பை வாய்ப்பு கிடைக்கும் என்பதும் உறுதியாக தெரிகிறது. எனவே “உங்களிடம் இனிமேல் என்ன நட்பு, இந்த மரியாதையே போதும்” என்ற வகையில் கௌதம் கம்பீரிடம் இறுக்கமான முகத்துடன் விராட் கோலி பெயருக்காக கை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.



