டீமோட நல்லதுக்கு தான் சுயநலமின்றி கே.எல் ராகுல் இதை செய்றாரு – டேல் ஸ்டெயின் புகழ்ச்சி

Steyn and KL Rahul
- Advertisement -

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தற்போது இந்திய அணியானது விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு முன்னதாக கேப்டன் சுப்மன் கில் காயமடைந்து வெளியேறியதால் ஒருநாள் அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். அந்த வகையில் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி தற்போது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

கே.எல் ராகுல் சுயநலமற்ற வீரர் : டேல் ஸ்டெயின்

இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை டிசம்பர் 6-ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தென்னாப்பிரிக்க தொடரை பொறுத்த வரை ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடி வரும் வேளையில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல் ராகுல் பின்வரிசையில் ஃபினிஷராக விளையாடி வருகிறார்.

- Advertisement -

டெஸ்ட் போட்டிகளை பொருத்த வரை துவக்க வீரராக விளையாடும் கே.எல் ராகுல் ஒருநாள் போட்டிகளை பொறுத்த வரை அணியின் தேவைக்கு ஏற்ப மிடில் ஆர்டரிலும், பின்வரிசையிலும் மாற்றி மாற்றி களமிறங்கி வருகிறார். இந்நிலையில் இந்த தன்மையை பாராட்டி பேசியுள்ள தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான டேல் ஸ்டெய்ன் இந்திய அணிக்காக சுயநலமின்றி கே.எல் ராகுல் விளையாடி வருவதாக தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : கே.எல் ராகுல் பேட்டிங் வரிசையில் தனக்கான இடத்தை அணியின் தேவைக்காக விட்டுக் கொடுத்து கீழே இறங்கி விளையாடி வருகிறார். என்னை பொறுத்த வரை ஒருநாள் போட்டிகளிலும் கே.எல் ராகுல் துவக்க வீரராக களமிறங்கினால் சதபடிப்பார் என்பதில் சந்தேகமே கிடையாது.

- Advertisement -

ஆனாலும் தற்போதைய இந்திய அணியில் பாண்டியா இல்லாததால் ஒரு பிராப்பரான ஃபினிஷர் தேவைப்படுகிறது. எனவே தான் அந்த இடத்தில் களமிறங்கி கே.எல் ராகுல் சுயநலமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்திய அணியின் நலனுக்காக அவர் எந்த இடத்திலும் இறங்கி விளையாட தயாராக இருக்கிறார்.

இதையும் படிங்க : சையத் முஷ்டாக் அலி தொடரில் இருந்து பாதியில் வெளியேறிய ஹார்டிக் பாண்டியா – என்ன காரணம்?

அதேபோன்று அனைத்து இடங்களிலுமே அவரால் சிறப்பாகவும் பேட்டிங் செய்ய முடிகிறது என டேல் ஸ்டெய்ன் கூறியுள்ளார். அவர் கூறியது போன்றே இந்த தென்னாப்பிரிக்க தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் பின் வரிசையில் களமிறங்கி விளையாடி வரும் கே.எல் ராகுல் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement