இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய மிகச் சிறப்பாக விளையாடி 358 ரன்கள் குவித்தும் 359 ரன்களுக்குள் தென்னாப்பிரிக்க அணியை கட்டுப்படுத்த முடியாமல் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
வருண் சக்கரவர்த்தியை ட்ரை பண்ணுங்க : ஹர்பஜன் சிங்
இந்திய அணி இந்த போட்டியில் இவ்வளவு பெரிய ரன் குவிப்பை வழங்கியும் பந்து வீச்சாளர்களால் இந்த இலக்கினை வைத்து வெற்றி பெற முடியாமல் அவர்களிடம் போட்டியை இழந்தது பலரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேவேளையில் தென்னாப்பிரிக்க அணி இந்த தொடரினை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் இந்த மோசமான தோல்விக்கு பின்னர் இந்திய அணியில் சில குறிப்பிட்ட மாற்றங்களை செய்ய வேண்டும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங்கும் தற்போதைய இந்திய அணியில் உள்ள குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை தாண்டி ஒருநாள் போட்டிகளிலும் வருண் சக்கரவர்த்தி பயன்படுத்தி பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரின் போது பும்ரா மற்றும் சிராஜ் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். அதேபோன்று ஒருநாள் போட்டிகளுக்கும் நல்ல வீரர்களை கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். என்னை பொறுத்தவரை டி20 போட்டியில் அசத்தலாக செயல்படும் வருண் சக்கரவர்த்தி ஒருநாள் போட்டிகளிலும் பந்துவீச வைக்கலாம்.
இதையும் படிங்க : எய்டன் மார்க்ரம் செஞ்சுரி அடிச்சிருந்தாலும் தெ.ஆ ஜெயிக்க இவரே காரணம் – ரவிச்சந்திரன் அஷ்வின் பதிவு
தற்போதைய இந்திய அணிக்கு தேவை விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளர்கள் தான். வருண் சக்கரவர்த்தியால் நிச்சயம் ஒருநாள் போட்டிகளிலும் விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றி வாய்ப்பை உருவாக்கி தர முடியும் என்ன ஹர்பஜன் சிங் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக இதுவரை நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள வருண் சக்கரவர்த்தி 10 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.



