இந்திய அணிக்கு எதிராக நேற்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி 359 ரன்கள் என்கிற மாபெரும் இலக்கை மிகச் சிறப்பாக சேசிங் செய்து அபார வெற்றி பெற்று இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
தெ.ஆ வெற்றிக்கு காரணமான இளம் வீரரை பாராட்டிய : ரவிச்சந்திரன் அஷ்வின்
இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவிக்க அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணிக்கு 359 ரன்கள் அடித்தால் வெற்றி என சவாலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அதனை தென்னாப்பிரிக்க வீரர்கள் மிகச் சிறப்பாக எதிர்கொண்டு போட்டியை வெற்றிகரமாக முடித்தும் காண்பித்தனர்.
இந்த போட்டியின் போது தென்னாப்பிரிக்க அணி சார்பாக துவக்க வீரராக களமிறங்கிய எய்டன் மார்க்ரம் 98 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 110 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அதேபோன்று மிடில் ஆர்டரில் தெம்பா பவுமா 46 ரன்களையும், பிரிட்ஸ்கீ 68 ரன்களையும், பிரேவிஸ் 54 ரன்களையும் குவித்திருந்தனர்.
இப்படி டாப் ஆர்டரில் விளையாடிய அனைவருமே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்ததால் தென்னாப்பிரிக்க அணி இந்த சேசிங்கை வெற்றிகரமாக நிறைவு செய்தது. ஆனாலும் இந்த போட்டியின் போது ஐந்தாவது வீரராக களமிறங்கிய பிரேவிஸ் ரன் ரேட்டை உயர்த்தும் வகையில் 34 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் என 54 ரன்கள் குவித்து அசத்தினார்.
அவரது அதிரடியான ஆட்டம் பந்துகளின் வித்தியாசத்தை குறைத்து அவர்களது வெற்றிக்கு உதவியது. அவரது இந்த அதிரடியான ஆட்டமே தென்னாப்பிரிக்க அணிக்கு ரன் ரேட்டில் மிகப்பெரிய அளவில் உதவியது. இந்நிலையில் இப்படி அதிரடியாக விளையாடிய டேவால்டு பிரேவிஸ்ஸை பாராட்டி இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு கருத்தினை பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க : இந்திய அணியை இப்படி வீழ்த்தி வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி – தெம்பா பவுமா பேட்டி
அந்த வகையில் அவர் பதிவிட்ட கருத்து யாதெனில் : “பிரேவ் பால்” ஒரு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்று பதிவிட்டுள்ளார். அதாவது தைரியமான ஆட்டம் நீங்கள் விளையாடியது ஒரு பாக்ஸ் ஆபீஸ் சினிமாவை போன்று இருந்தது என ரவிச்சந்திரன் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.



